உத்திர பிரதேசத்தில் மழை வேண்டி கிராம மக்கள் பொம்மை தவளைகளுக்கு திருமணம் செய்த நிகழ்வு பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்திர பிரதேச மாநிலம் வாரனாசியில் கிராம மக்கள் குழுவாக இணைந்து பொம்மை தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இதுகுறித்து விழாவை ஏற்படுத்திய ஒருங்கினைப்பாளர்கள் தெரிவிக்கையில் "இது பழைய மரபு தான், மழையை வேண்டி இந்திர தேவனுக்கு இவ்வாறு செய்வது ஐதீகம். அதன் அடிப்படையிலேயே இவ்வாறு இரண்டு பொம்மை தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.


மேலும் இந்த திருமணத்தினை நடத்தி வைத்தத்தில் பெரும் மகிழ்ச்சிக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.



தற்போது மழை காலம் நிலவி வரும் போதிலும், தங்களது கிராமத்தில் மழை இல்லாமல் இருப்தாலும், இந்த திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளதாக விழா குழுவினர் தெரிவித்துள்ளனர்