சஷ்டி நாளான இன்று, விரதம் இருந்து குமரனை வேண்டுவோம். நம் சங்கடங்கள் அனைத்தையும் தீர்த்தருள்வான் கந்தவேலன்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்தவகையில் இன்று சஷ்டி தினம். இன்று விரதம் இருந்து முருகப்பெருமானை நினைத்து பூஜியுங்கள். கந்தசஷ்டி கவசம் முதலானவை பாராயணம் செய்து வழிபடுங்கள். சஷ்டி நாளில், அருகில் உள்ள முருகன் கோயிலுக்குச் சென்று மனதார வேண்டிக்கொள்ளுங்கள். உங்கள் கவலையெல்லாம் பறந்தோடச் செய்வார் வேலவன்.


முருகனுக்கு செந்நிற மலர்கள் உகந்தவை. எனவே செம்பருத்தி, சிகப்பு ரோஜா, செவ்வரளி முதலான மலர்கள் சூட்டி, அழகன் முருகனை கண்ணாரத் தரிசித்து, மனதார வேண்டிக் கொள்ளுங்கள். சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து உங்கள் வேண்டுதல்களை மனதாரக் குறைகளைச் சொல்லுங்கள். நம்மையும் நம் வாழ்வையும் உயர்த்துவான் கார்த்திகேயன்.