அயோத்தி: உத்தரப்பிரதேச அயோத்தியில் உள்ள பிரமாண்டமான ஸ்ரீராமர் கோயிலின்   கட்டுமானப் பணிகள் அடுத்த இரண்டு, மூன்று மாதங்களில் தொடங்கவுள்ளன. மிகப்பெரியத் தடைக்கற்கள் நீங்கி விட்டாலும், ஸ்ரீராம ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை ஒன்றன் பின் ஒன்றாக சவால்களை எதிர்கொள்கிறது. அதில் பிரதானமானது, “அயோத்தியின் பிரமாண்ட ஸ்ரீராமர் ஆலயத்தில் தற்போதைய சிலையே கருவறையில் வைக்கப்படுமா? அல்லது பெரிய கோவிலுக்கு ஏற்றாற் போல பிரம்மாண்ட சிலையை வைப்பதா?” என்பதே...  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராம்லல்லா சிலைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைத்தது...
1949ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ராம்லல்லாவின் தற்போதைய சிலை மிகச் சிறியது. இருப்பினும், இந்த குழந்தை போன்ற சிலையானது சர்ச்சைக்குரிய கட்டமைப்பிலேயே தோன்றியது என்று நம்பிக்கை நிலவுகிறது. சிலர் அது தவறு என்று சொல்கின்றபர்,   யாரோ சிலர், அங்கு சிலையை ரகசியமாக வைத்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் உண்மை எதுவாக இருந்தாலும் சரி, அந்த ராம்லல்லாவின் சிலைக்கு சட்ட அங்கீகாரமும் கிடைத்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில், அதே சிலை பிரமாண்ட ராம் கோவிலில் வைக்கப்படுமா அல்லது புதிய சிலை கட்டப்படுமா? என்பது பிரம்மாண்டமான கேள்வியாக எழுந்துள்ளது.


அயோத்தியில் பல ஆண்டுகளாக வழிபட்டு வரும் 'ஸ்ரீ ராம்லல்லா சிலை' மாற்றப்படலாம் என்பதற்கான   அறிகுறிகள் உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், இந்த வழக்கை நீதிமன்றத்தில் வென்ற ராம்லல்லாவின் சிலையை எவ்வாறு மாற்ற முடியும் என்ற கேள்வி எழுகிறது. வேறு எந்த சிலையை கோவிலின் கருவறையில் வைக்க முடியும்? புதிய கோயிலின் புதிய சிலை எப்படி இருக்கும்? என்ன மாற்றம் நடக்கும்? என்ற பல்வேறு கேள்விகள் ஸ்ரீராம ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் முன் நிற்கிறது. இந்த சூழ்நிலையில், அறக்கட்டளைக்கு வரும் பல வகையான பரிந்துரைகள் பரிசீலிக்கப்படுகின்றன.


ஸ்ரீ ராம் கோயிலின் கருவறையில் தற்போதுள்ள சிலையே இருக்கும் என்பதற்கான வாய்ப்பு இருந்தாலும், தற்போதுள்ள சிலை பிரமாண்டமான ஸ்ரீ ராமர் கோயிலின் கருவறையில் இருக்கும்,  அதே நேரத்தில் பிரம்மாண்டமான ஒரு பெரிய சிலை கருவறையில் அமைக்கப்படும். இதன் பின்னணியில் உள்ள காரணம் என்னவென்றால், தற்போதுள்ள சிலையின் அளவு மிகச் சிறியது, ஒரு பெரிய கோயில் கட்டப்படும்போது, கோடிக்கணக்கில் வரும் பக்தர்கள் கடவுளைப் பார்ப்பதில் பெரிய சிக்கலை எதிர்கொள்ள நேரிடும்.  


ராமர் கோயில் உருவாக வேண்டும் என்பதற்காக மக்கள் பல்வேறு வகையிலும் போராடினார்கள். பல ஆண்டுகளாக ராமர் ஆலயம் அயோத்தியில் கட்டப்படும் நாளுக்காக காத்திருப்பவர்களின் எண்ணிக்கையும் கணக்கில் அடங்காது. அந்த பொன்னான சந்தர்ப்பம் வந்து அமையும்போது, அதை சரியாக பார்க்க முடியவில்லையென்றால் அது மிகவும் ஏமாற்றமளிப்பதாக இருக்கும். எனவே, கருவறையில், பக்தர்கள் தூரத்திலிருந்து பார்க்கும்போது, நன்றாக தெரியும் வகையில் தற்போதுள்ள சிலையுடன் மற்றொரு பெரிய சிலையும் வைக்கப்படும்.


தற்போதுள்ள கடவுளின் சிலை 'நிரந்தர சிலை', அதாவது, இந்த சிலை நிரந்தரமாக வைக்கப்படும். இந்தச் சிலை எந்தவொரு சூழ்நிலையிலும் அங்கிருந்து நகர்த்தப்படாது. புதிய சிலை 'நகரும் சிலை' வடிவத்தில் இருக்கும். அதாவது தேவைப்படும்போது, உற்சவ மூர்த்தியாகவும் புதிய சிலை பயன்படுத்தப்படலாம். ஆதாரங்களின்படி, இந்த விருப்பம் அல்லது பரிந்துரை இன்னும் பரிசீலனையில் இருக்கிறது. இருப்பினும், இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்று தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.


ALSO READ | ‘கணபதி பப்பா மோர்யா’ கோஷங்களுக்கிடையே 18 மணி நேரம் கழித்து உயிருடன் மீட்கப்பட்ட மொகம்மத்!!