“விளக்கு எரிந்த வீடு வீணாய் போகாது ” என்பது பழமொழி. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நம் உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களில் மூலாதாரமும், சுவாதிஷ்டானமும் நல்லெண்ணெய் விளக்கு ஏற்றுவதால் தூய்மையடைகிறது. அதே போல மணி பூரகம், அனாஹதம் இரண்டும் நெய்விளக்கு ஏற்ற தூய்மை அடைந்து நற்பலன்களை அடைகிறது.  நல்லெண்ணெய் விளக்கு ஏற்ற சூரியநாடி சுறுசுறுப்படைகிறது.  நெய் விளக்கு சுஷம்னா நாடியை தூண்டிவிட உதவுகிறது.


சூரியன் மறைந்ததும் சில விஷ சக்திகள் சுற்றுசூழலில் பரவி வீட்டிற்குள்ளும் வர வாய்பிருக்கிறது. எனவே ஒளியின் முன் அந்த விஷ சக்திகள் அடிபட்டுபோகும்.  எனவே தான் காலை, மாலை நேரத்தில் விளக்கேற்று கின்றோம். இது அறிவியல் உண்மையும் ஆகும்.


தீபத்தின் சுடருக்கு தன்னை சுற்றி உள்ள தேவையற்ற கதிர்களை(நெகடிவ் எனர்ஜி) ஈர்க்கும் சக்தி உண்டு. அவ்வாறு ஈர்க்கும்போது நம்மை சுற்றி பாசிடிவ் எனர்ஜி அதிகரிக்கும்.  நம்  சுற்றுப்புறம்  தெளிவாகவும் பலத்தோடும் காணப்படும். இரண்டு நாள் வீட்டில் விளக்கேற்றாமல் இருந்தால் வீடே மயானம் போல் தோன்றும். எல்லோருமே சோர்வாக இருப்பார்கள். இதுவே விளக்கேற்றுவதன் தத்துவம்.


# நல்லெண்ணெய் விளக்கு ஏற்ற சூரியநாடி சுறுசுறுப்படைகிறது. 
# நெய் விளக்கு சுஷம்னா நாடியை தூண்டிவிட உதவுகிறது.
# கடலை எண்ணெய் உபயோகம் செய்ய கூடாது. 
# மண்ணெண்ணெய் விளக்கும் வேண்டாம்.
# மெழுகுவர்த்தி ஏற்றினால் அதில் ஏப்படும் புகையால் உடல் நலத்தை கெடுக்கும். மேலும் ஆஸ்துமா, மார்பக புற்றுநோய் உண்டாகும். 


பொதுவாக மாலை 6.30க்கு விளக்கு  ஏற்றுவதே நமது மரபு. இதை கருக்கல் நேரம் என்பர்  வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களை தினசரி விளக்கேற்றும்படி கேட்டுக்கொள்ளவேண்டும்.  இப்படி செய்தால் அவர்களின் முகப்பொலிவு பன்மடங்கு கூடும்.