காமன்வெல்த் போட்டியில் இந்தியா மொத்தம் 12 தங்கம், 4 வெள்ளி மற்றும் 8 வெண்கலம் என 24 பதக்கங்களை பெற்று 3-வது இடத்தில் உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

21_வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டு கோஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. காமன்வெல்த் போட்டி மொத்தம் 12 நாட்கள் நடைபெறும். இந்த போட்டியில் மொத்தம் 71 நாடுகள் பங்கேற்கின்றன.


இதில், 12 தங்கம், 4 வெள்ளி, 8 வெண்கலம் என 24 பதக்கங்களுடன் தரவரிசையில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது.


ஆஸ்திரேலியா 38 தங்கம், 32 வெள்ளி, 33 வெண்கலத்துடன் முதலிடத்திலும், இங்கிலாந்து 22 தங்கம், 24 வெள்ளி, 16 வெண்கலத்துடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன.


கனடா, ஸ்காட்லாந்து, நியூஸிலாந்து உள்ளிட்டவை முறையே நான்காவது, ஐந்தாவது, ஆறாம் இடங்களை வகிக்கின்றன.



இந்நிலையில், இதில் மகளிர் பளு தூக்குதல் போட்டியின் 53 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சஞ்சிதா சானு தங்கம் வென்றார். முன்னதாக நடை பெற்ற 48 கிலோ பிரிவு பளுதூக்குதலில், இந்தியாவின் சிகோம் மிராபாய் சானு தங்கம் வென்றார். 


அவரை தொடர்ந்து, காமன்வெல்த் போட்டி பளு தூக்குதலில் 105 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் பிரதீப் சிங் வெள்ளி பதக்கம் வென்றார். 


இந்நிலையில், பதக்கம் வென்ற இந்திய பளு தூக்கு வீராங்கனைகள் ஆஸ்திரேலியாவில் இருந்து தற்போது டெல்லி விமான நிலையத்திற்கு வருகை புரிந்துள்ளனர். 


அவர்களுக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.