திராவிட நாடு குறித்த திமுக கருத்து கூறியதாக தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுகுறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது;- தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைப்பது கேள்விக்குறிதான். திராவிட நாடு குறித்த திமுக கூறியதாக தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. மத்திய பாஜக அரசால் தென் மாநிலங்கள் புறக்கணிப்படுகின்றன. என்று தெரிவித்தார்.


மேலும் அவர், விவசாயிகள், நீட் போன்ற பிரச்னைக்கு பிரதமரை சந்திக்க வாய்ப்பு கேட்டும் கிடைக்கவில்லை. காவிரி விவகாரத்தில் எதிர்க்கட்சி என்ற வகையில் இயன்றவரை பணிகளை திமுக செய்கிறது.


காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான அழுத்தத்தை முதல்-அமைச்சர் தர வேண்டும். காவிரி, நீட் பிரச்சனையில் தமிழக உரிமையை நிலை நாட்டுவதற்கான நல்ல வாய்ப்பை பயன்படுத்த வேண்டும். 


மாநில அரசின் நலனை நிலைநிறுத்த ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு எடுத்த முடிவை திமுக ஆதரிக்கிறது. கர்நாடக தேர்தலை மனதில் வைத்து காவிரி வாரியத்தை மத்திய அரசு தாமதபடுத்துகிறது. 


ஆந்திர முதல்வருக்கு இருக்கும் துணிச்சல் போன்று தமிழக முதல்வருக்கு துளியாவது இருக்க வேண்டும். காவிரி விவகாரத்தில் ஆட்சியிலுள்ள அதிமுகதான் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி நீர் கிடைக்க தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு திமுக துணை நிற்கும்.


மேலும், தென் மாநிலங்கள் ஒன்றிணைவதைப் பார்க்கும்போது, திராவிட நாடு கோரிக்கை வலுவடைவதைப்போல் தோன்றுகிறது. இந்த கோரிக்கை ‘வந்தால் வரவேற்கப்படுகிறது. வரும் என்ற நம்பிக்கையில் நான் இருக்கிறேன்’ என்றார்.