அரசு வேலையில் இருக்கும் ஒருவர் மரணம் அடைந்தால், அந்த நபரின் குடும்ப உறுப்பினருக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு கொடுக்கப்படும். அரசுப் பணியில் இருக்கும் கணவன் இறந்தால், அவரது மனைவிக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இந்திய ரயில்வேயிலும் இதே நடைமுறை பின்பற்றப்படுகிறது. பணியின் போது ஒரு ஊழியர் இறந்தால், அவரது குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | IRCTC Nepal Tour: நேபாளம் சுற்றி பார்க்க வாய்ப்பு வழங்கும் ஐஆர்சிடிசி


மேலும், மருத்துவக் காரணங்களுக்காக ஓய்வு பெற்ற குடும்ப உறுப்பினர்கள் அல்லது மருத்துவ ரீதியாக ஊனமுற்றவர்கள்/தகுதியற்றவர்களுக்கும் கூட இந்தப் பணி வழங்கப்படுகிறது. பணியாளருக்கு நிதி உதவி வழங்குவதே இதன் நோக்கம். ஆனால் அதற்கு சில விதிகள் மற்றும் நிபந்தனைகள் உள்ளன. பொதுவாக, நிகழ்வு நடந்த நாளிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்குள் கருணை அடிப்படையில் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். சில சமயங்களில், இதற்கும் விதிவிலக்கும் உண்டு. இயக்குநர் ஜெனரல், RDSO ஒப்புதலுடன் இந்த ஐந்து வருட காலப்பகுதி தள்ளுபடி செய்யப்படலாம்.


ஆனால், இந்திய ரயில்வே வரலாற்றில் முதல்முறையாக கருணை அடிப்படையில் 10 மாத குழந்தைக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கரில் நடந்த சாலை விபத்தில் கணவன் மனைவி உயிரிழந்தனர். இவர்களுக்கு 10 மாத பெண் குழந்தை உள்ளது. அவரது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, இந்திய ரயில்வே அவருக்கு கருணை வேலை வழங்க முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், 18 வயதுக்குப் பிறகு அந்த பெண் குழந்தை இந்திய ரயில்வேயில் சேர முடியும். சிறுமியின் தந்தை ராஜேந்திர குமார் பிலாயில் உள்ள ரயில்வே யார்டில் உதவியாளராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | IRCTC Tour: IRCTC சிறந்த டூர் பேக்கேஜ் அறிமுகம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ