கேரளாவில் நவம்பர் முதல் அனைத்து பள்ளிகளும் திறப்பு!
கேரளாவில் நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு
இந்தியாவிலேயே அதிக கொரோன தொற்று கொண்ட மாநிலமாக கேரள இருந்து வந்தது. சமீபத்தில் ஓணம் பண்டிகையை ஒட்டி கேரளாவில் சிறிய தளர்வுகள் அளிக்கப்பட்டது. இதன் காரணமாக குறைந்திருந்த கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்தது. அதன் பின் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
கேரளாவில் தினசரி தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கையையும், கொரோனா பரிசோதனை எண்ணிக்கையையும் அதிகப்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, நாட்டிலேயே தினசரி கொரோனா தொற்று அதிகம் பதிவாகும் கேரளாவில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு நடவடிக்கைகள் சமீபத்தில் ரத்து செய்யப்பட்டன. இதற்கு பதிலாக கேரளாவில் தினசரி கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்தியதுடன் அங்கு தடுப்பூசி செலுத்துவதையும் அதிகப்படுத்தி உள்ளது.
திருவனந்தபுரம் மாவட்டத்தில் மட்டும் 12 ஆயிரம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதேபோல, கேரளாவில் ஒரு லட்சத்து 71 ஆயிரத்திற்கும் மேலான கொரோனா பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.
கேரளாவில் தொற்று குறைந்திருந்தாலும் பொதுமக்கள் கொரோனா விதிமுறைகளான முகக்கவசம், சமூக இடைவெளி, கிருமிநாசினி பயன்படுத்துதல் உள்ளிட்ட கொரோனா தற்காப்பு விதிமுறைகளை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதே நேரம் கொரோனா விதிமுறை மீறல்களை கண்காணித்து அபராதமும் விதித்து வருகிறது கேரள காவல்துறை.
கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நவம்பர் 1 ஆம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்த்தில் ஏற்கனவே 9 முதல் 12 வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் நாளை முதல் திறக்கப்பட உள்ளது.
ALSO READ ஆசிரியையின் அறப்பணிக்கு குவியும் பாராட்டுக்கள்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR