ஆசிரியையின் அறப்பணிக்கு குவியும் பாராட்டுக்கள்!

கேரளாவில் வீடு இல்லாத ஏழை மாணவிகளுக்காக இலவசமாக வீடு கட்டி கொடுக்கும் பெண்கள் பள்ளி ஆசிரியைகளின் சமூக பணிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 19, 2021, 02:05 PM IST
ஆசிரியையின் அறப்பணிக்கு குவியும் பாராட்டுக்கள்! title=

கொச்சி:  கேரளாவில் வீடு இல்லாத ஏழை மாணவிகளுக்காக இலவசமாக வீடு கட்டி கொடுக்கும் பெண்கள் பள்ளி ஆசிரியைகளின் சமூக பணிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

கேரள மாநிலத்தின் கொச்சி மாவட்டத்திலுள்ள, தோப்பும்பாடியில் உள்ள பள்ளியில் பணியாற்றும் இரண்டு ஆசிரியைகள் இணைந்து இந்த பணியை மேற்கொண்டு வருகின்றனர்.  2014-ம் ஆண்டு தந்தையை இழந்த ஒரு மாணவிக்காக வீடு கட்டியதில் தொடங்கிய இந்த பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  தற்போது வரை மாணவிகளுக்காக 150 வீடுகள் கட்டி கொடுத்திருப்பதாக இந்த ஆசிரியைகள் கூறுகின்றனர். வீடு கட்டி கொடுக்கும் பணிக்காக நன்கொடை மூலம் நிதி சேகரிக்கின்றனர்.

kerala

இதுபற்றி அந்த ஆசிரியைகளின் ஒருவரான லிஸ்சி கூறுகையில், சொந்த நிலம் இருந்தும் சரியான வீடு இல்லாத தங்கள் மாணவிகளுக்கு நிரந்தர வீடு கட்டுவதற்காக  ஹவுஸ் சேலஞ்ச் என்ற திட்டத்தை தொடங்கியதாக குறிப்பிட்டார்.  “இந்த திட்டத்தை தொடங்கிய பிறகு பல குடும்பங்களுக்கு நிலம் இல்லை என்பதை அறிந்தோம். எனவே அவர்களுக்காக நிலத்தையும் தானம் செய்யுமாறு கேட்டு மக்களை அணுகினோம்.

keral

ஒத்துழைப்பு மற்றும் பகிர்ந்தளிக்கும் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதன் மூலம் வீடற்ற ஒரு சமூகத்தை உருவாக்குவதே எங்கள் கனவு” என்கிறார் லிஸ்சி ஆசிரியை.இதுபோன்ற நல்ல உள்ளம் கொண்ட ஆசிரியைகள் இருப்பதும் பெருமையான ஒன்றுதான்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News