2022-23-ம் கல்வி ஆண்டுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அகில இந்திய தொழில்நுட்பக்குழு(ஏஐசிடிஇ) வெளியிட்டுள்ளது. அதன்படி குறிப்பிட்ட பொறியியல் படிப்புகளில் சேர இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்கள் கட்டாயமில்லை என அகில இந்திய தொழில்நுட்பக்குழு (ஏஐசிடிஇ) அறிவித்துள்ளது. இளங்கலை கட்டடக்கலை (ஆர்க்கிடெக்சர்) படிப்பிற்கு 12-ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களை படித்திருக்க வேண்டிய கட்டாயமில்லை. கணினி அறிவியல்(CSE), மின்(EEE) மற்றும் மின்னணு பொறியியல் படிப்புகளில் சேர 12-ம் வகுப்பில் வேதியியல் பாடம் படித்திருப்பது கட்டாயமில்லை எனவும் அகில இந்திய தொழில்நுட்பக்குழு அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | அடுத்த ஆண்டு ‘எம்.பில்’ பட்டம் நீக்கப்படும்: யுஜிசி அறிவிப்பு


இதே போன்று, பேஷன் டெக்னாலஜி மற்றும் பேக்கேஜிங் டெக்னாலஜி,  உணவு பதப்படுத்துதல், தோல் பதனிடுதல் ஆகிய படிப்புகளுக்கும் 12 -ம் வகுப்பில் கணிதம் படித்திருக்க வேண்டும் என்ற தேவையில்லை என அகில இந்திய தொழில்நுட்பக்குழு தெரிவித்துள்ளது. ஏஐசிடிஇ-யின் புதிய விதிகளின் படி, மூன்றில் ஒரு பங்கு பொறியியல் பாடங்களைப் படிக்க 12-ம் வகுப்பில் கணிதம் படிக்க வேண்டிய அவசியமில்லை. இதே போன்று,  கொரோனாவால் தாய், தந்தையரை இழந்த குழந்தைகளுக்காக 2022-23-ம் கல்வியாண்டில் அனைத்து பாலிடெக்னிக் பாடப்பிரிவுகளிலும் 2 இடங்கள் ஒதுக்கப்படும் எனவும், இதனால் பிற மாணவர்களின் கல்வி எந்த விதத்திலும் பாதிக்காது எனவும் ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது. ஏஐசிடிஇ-யின் இந்த முடிவுக்கு மாறுபட்ட விமர்சனங்கள் எழுந்துள்ளன. பொறியியல் படிப்புகளுக்கு இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய படிப்புகளில் குறைந்தபட்ச அறிவு தேவை என ஒரு தரப்பினரும், இந்த மாற்றங்களினால் அதிக மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் சேர முடியும் என ஒரு தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.  


மேலும் படிக்க | தேசியக் கல்விக் கொள்கையை நிராகரிப்போம்; மாநிலக் கல்விக் கொள்கையை வரவேற்போம்! - கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR