CBSC பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு, தேர்வு முடிவுகள் எப்போது தெரியுமா?
CBSE பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு, தேர்வு முடிவுகள் தேதி, செயற்முறைத் தேர்வுகள் தேதி ஆகியவற்றை மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அறிவித்தார்
புதுடெல்லி: சிபிஎஸ்ஈ (CBSE) பொதுத்தேர்வு அறிவிப்பு வெளியிட்டார் மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால். சிபிஎஸ்.சி பாடத்திட்டத்தில் படிக்கும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மே 4ஆம் தேதி தொடங்கும் தேர்வுகள், ஜுன் 10ஆம் தேதி வரை நடைபெறும். செயற்முறை தேர்வுகள் (Practical Exams) மார்ச் மாதம் முதல் தேதியில் இருந்து தொடங்கும்.கொரோனா (Coronavirus) வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தேர்வுகள் நடத்தப்படும் என்று மத்திய் ஆமைச்சர் ரமேஷ் போக்ரியால் (Ramesh Pokhriyal Nishank) தெரிவித்தார். (Ramesh Pokhriyal Nishank) (Ramesh Pokhriyal Nishank)
சிபிஎஸ்சி தேர்வுகள் தொடர்பான முக்கிய தகவல்கள்
1. மே 4ஆம் தேதி தேர்வுகள் தொடங்கும்
2. ஜுன் 10ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும்
3. செயற்முறைத் தேர்வுகள் மார்ச் முதல் தேதியன்று தொடங்கும்
4, தேர்வு முடிவுகள் ஜுலை 15க்கு வெளியிடப்படும்
5. 70 சதவிகித பாடங்களில் இருந்து தான் கேள்விகள் கேட்கப்படும்.
6. பாடங்கள் ஏற்கனவே 30 சதவிகித அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளன
Also Read | CBSE பொது தேர்வுகள் குறித்து மத்திய கல்வி அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்..!!
ஜனவரி மற்றும் பிப்ரவரியில் சிபிஎஸ்இ (CBSE) தேர்வு நடத்தப்படாது எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், சிபிஎஸ்சி (CBSE) பொதுத்தேர்வு தேதிகள் பற்றி டிசம்பர் 31-ம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியாகும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.
நாடு முழுவதும் கடந்த 8 மாசமாக லாக்டவுன் அமலில் இருக்கிறது.. இதனால், இதனால், ஸ்கூல்கள், காலேஜ்கள் என அனைத்துமே மூடப்பட்டுள்ளன... இதன்காரணமாக, சிபிஎஸ்சி பொதுத்தேர்வுகளையும் மத்திய அரசு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தது. இந்த நிலையில் இன்று தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய் ஆமைச்சர் ரமேஷ் போக்ரியால் (Ramesh Pokhriyal Nishank) இன்று தேர்வு தேதிகளை அறிவித்தார்.
Also Read | அடுத்த கல்வி ஆண்டில் JEE தேர்வு 4 முறை நடத்தப்படும்: ரமேஷ் போக்ரியால்!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR