10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ ஜூலை இறுதிக்குள் வெளியிடலாம். இருப்பினும், 10 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் தேதி குறித்து சிபிஎஸ்இ இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை. இருப்பினும் இம்மாத இறுதிக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும் என கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக நேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்களிடம் பேசுகையில், சிபிஎஸ்இ 10 ஆம், 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறித்த நேரத்தில் வெளியிடப்படும் என்றும், தாமதம் ஏற்படாது என்றும் அவர் கூறினார்.


மேலும் படிக்க | பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் ஹால் டிக்கெட் பெறுவது எப்படி


சிபிஎஸ்இ டெர்ம் 2 10 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு 10 ஆம் வகுப்பு தேர்வு மே 24 ஆம் தேதி வரையும் மற்றும் 12ம் வகுப்பு தேர்வு 2022 ஜூன் 15 தேதி வரையும் நடைபெற்றது. தற்போது, இந்த தேர்வு ​​முடிவுகள் தொடர்பான சமீபத்திய புதுப்பிப்புக்காக வாரியத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக மாணவர்கள் காத்திருக்கின்றனர்.


இந்த தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, மாணவர்கள் வாரியத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான cbse.gov.in ஐப் பார்வையிடுவதன் மூலம் தேர்வு முடிவைச் சரிபார்க்க முடியும். இதற்கு அவர்கள் தங்களின் ரோல் எண், பள்ளிக் குறியீடு, பிறந்த தேதி ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும். அதிகாரப்பூர்வ இணையதளம் தவிர, டிஜிலாக்கர் மற்றும் எஸ்எம்எஸ் மூலமாகவும் ரிசல்ட்டை பார்க்கலாம். 


எஸ்எம்எஸ் மூலம் சிபிஎஸ்இ 10 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவை எவ்வாறு சரிபார்ப்பது
எஸ்எம்எஸ் மூலம் முடிவைப் பார்க்க, உங்கள் மொபைலில் cbse10 என டைப் செய்து, ஸ்பேஸ் கொடுங்கள். இதற்குப் பிறகு உங்கள் ரோல் எண்ணை டைப் செய்து 7738299899 என்ற எண்ணுக்கு அனுப்பவும். சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு முடிவைச் சரிபார்க்க, cbse12 என டைப் செய்து ஸ்பேஸ் கொடுங்கள். இதற்குப் பிறகு உங்கள் ரோல் எண்ணை டைப் செய்து 7738299899 என்ற எண்ணுக்கு அனுப்பவும்.


சிபிஎஸ்இ 10 ஆம், 12 ஆம் வகுப்பு டெர்ம் 2 முடிவுகள் 2022: மதிப்பெண்களைச் சரிபார்க்க அதிகாரப்பூர்வ இணையதளங்கள்
www.cbseresults.nic.in 
www.results.gov.in
www.digilocker.gov.in


மேலும் படிக்க | 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று செய்முறைத் தேர்வு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ