CBSE Class 12 Latest News: பொதுத்தேர்வு இல்லாத நிலையில் மதிப்பெண்கள் எப்படி போடப்படும்?
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்களை எப்படி வழங்குவது என்பதை முடிவு செய்யும் செயல்முறையைத் தொடங்குவது தொடர்பாக சிபிஎஸ்இ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது
சிபிஎஸ்இ வாரியத்தில் படிக்கும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்களை எப்படி வழங்குவது என்பதை முடிவு செய்யும் செயல்முறையைத் தொடங்குகிறது சிபிஎஸ்இ. ஆசிரியர்களோ, மாணவர்களோ பீதியடைய வேண்டாம் என்றும் CBSE தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட சிபிஎஸ்இ செயலாளர் அனுராக் திரிபாதி, மதிப்பெண்களை எப்படி நிர்ணயிப்பது என்பதை முடிவு செய்ததும், அது தொடர்பான தகவல்கள் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.
சி.பி.எஸ்.இ வாரியத்தில் பயிலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகளை மத்திய அரசு ரத்து செய்தது. அதன் பிறகு மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (Central Board of Secondary Education) மாணவரின் திறனை எப்படி மதிப்பிடுவது அதாவது, மாணவர்களுக்கு எப்படி மதிப்பெண்களை கொடுப்பது என்பதற்கான அளவுகோல்களை கட்டமைக்கும் பணியைத் தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக அறிக்கையை வெளியிட்ட சிபிஎஸ்இ செயலாளர் அனுராக் திரிபாதி, எனவே, பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பீதி அடைய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
“நாங்கள் 12 ஆம் வகுப்பு மதிப்பீட்டிற்கான அளவுகோல்களை வடிவமைக்கும் பணியில் இருக்கிறோம். அது முடிந்ததும் பொது களத்தில் வைப்போம். பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இதற்கு சற்று காத்திருக்க வேண்டும். யாரும் கவலைப்பட வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன் ”என்று சிபிஎஸ்இ செயலாளர் அனுராக் திரிபாதி தெரிவித்துள்ளார்.
நாட்டில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் கொரோனா தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு வாரியத் தேர்வுகளை ரத்து செய்தது. இதனை அறிவித்த பிரதமர் நரேந்திர மோடி, மாணவர்களின் நலனுக்காகவும், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே உள்ள பதட்டம் முடிவுக்கு வர வேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு வாரியத் தேர்வுகளை ரத்து செய்வதற்கான நடவடிக்கை பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற ஒரு உயரநிலைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது, இதில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண்களை நன்கு வரையறுக்கப்பட்ட புறநிலை அளவுகோல்களின்படி தொகுக்க சிபிஎஸ்இ நடவடிக்கை எடுக்கும் என்று முடிவு செய்யப்பட்டது.
பல மாநிலங்களில் COVID-19 பாதிப்பு அதிகமாக இருக்கும் நிலையில், சுகாதார தொடர்பான அச்சங்களும் அதிகரித்துள்ளன. எனவே, மாணவர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு மிக முக்கியமானது என்றும், இந்த அம்சத்தில் எந்த சமரசமும் செய்துக் கொள்ள முடியாது என்பதால் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் பிரதமர் மோடி கூறினார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR