Covid-vaccination: தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை கோரும் வெளிநாட்டில் படிக்கும் மாணவர்கள்

கோவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களுக்கும் இடையில் 3 மாத இடைவெளி இருப்பதால் வெளிநாட்டிற்குச் கல்வி கற்கச் செல்லும் மாணவர்கள் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jun 2, 2021, 04:02 PM IST
  • தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை கோரும் வெளிநாட்டில் படிக்கும் மாணவர்கள்
  • முதலில் 45 நாள் நேர இடைவெளியில் தடுப்பூசி போடப்பட்டது
  • தற்போது இரண்டு தடுப்பூசிகலுக்கான இடைவெளி 12-16 வாரங்களாக உயர்த்தப்பட்டுள்ளது
Covid-vaccination: தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை கோரும் வெளிநாட்டில் படிக்கும் மாணவர்கள் title=

சென்னை: கொரோனா பரவலை கட்டுப்படுத்தி, வைரஸை இல்லாமல் செய்யும் முயற்சிகள் உலகமெங்கும் எடுக்கப்பட்டு வருகின்றன. அதில் முக்கியமானது தடுப்பூசி.

இந்தியாவில் முதலில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கோவிட் தடுப்பூசி போடப்பட்டு, பிறகு அது 45 வயதுக்கும் அதிகமானவர்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது.

மே முதல் நாளில் இருந்தே 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கோவிட் தடுப்பூசி போடலாம் என்று அரசு அறிவித்ததை அடுத்து, 18-44  வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கிவிட்டது. ஆனால், இந்த வயதினர், தடுப்பூசிக்காக பதிவு செய்வதற்கு காத்திருக்க வேண்டியிருக்கிறது. 

Also Read | அண்ணா பல்கலை. தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டிக்கவும்: வைகோ

அவர்களுக்கு காத்திருப்பு காலம் அதிகமாகிறது. எனவே, வெளிநாட்டுக்குச் செல்லும் மாணவர்கள் கோவிட் -19 தடுப்பூசியை போடுவதில் முன்னுரிமை தேவை என்று கோருகின்றனர்.  

அதுமட்டுமல்ல, கோவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களுக்கும் இடையில் 3 மாத இடைவெளி இருப்பதால் வெளிநாட்டிற்குச் கல்வி கற்கச் செல்லும் மாணவர்கள் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்

இந்தியாவில் இரண்டு தடுப்பூசிகளுக்கு இடையிலான 45 நாள் நேர இடைவெளி 12-16 வாரங்களாக உயர்த்தப்பட்ட பின்னர் கல்விக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்திய மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஜூன் அல்லது ஜூலை இறுதிக்குள் வெளிநாடு செல்லவிருந்தவர்கள் மே மாதத்தில் தங்கள் முதல் தடுப்பூசியை எடுத்துக் கொண்டாலும், அடுத்த தடுப்பூசிக்காக இன்னும் 3 மாதம் காத்திருக்க வேண்டும்.

Also Read | Breaking! Class 12 Exams:மத்தியப்பிரதேசத்திலும் 12ஆம் வகுப்பு தேர்வு ரத்து

புதிய விதிமுறையின் காரணமாக, மாணவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வது மற்றும் அதற்கான சான்றிதழ் பெறுவதற்கான காத்திருப்பு காலம் தற்போது 2-3 மாதங்களாக அதிகரித்துவிட்டது. இது வெளிநாட்டிற்கு சென்று படிக்கும் மாணவர்களின் பயணத்தை தாமதப்படுத்தும் என்று கூறப்படுகிறது.

அதிலும், கனடாவுக்குச் செல்லும் மாணவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் கனாடா நாட்டின் பல்கலைக்கழகங்களில் படிப்பவர்கள், ஏப்ரல் பிற்பகுதியில் அல்லது மே மாத தொடக்கத்தில் சென்றிருக்கவேண்டும். ஆனால், ஏப்ரல் 22 முதல் இந்தியாவில் இருந்து நேரடி விமானங்களுக்கு கனடா தடை விதித்திருப்பதால் அவர்களால் செல்லமுடியவில்லை.

இந்தியாவின் கொரோனாவின் இரண்டாவது அலை ஏப்ரல் மற்றும் மே மாதங்களிலும் தொடர்ந்த நிலையில், இந்த விமானத் தடை ஜூன் 22 வரை நீட்டிக்கப்பட்டது. இதுவே, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பல்கலைக்கழகங்களைப் பொறுத்தவரை, மாணவர்கள், ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் செல்வார்கள்.

Also Read | Class 12 Exams:மத்தியப்பிரதேசத்திலும் 12ஆம் வகுப்பு தேர்வு ரத்து

மே மாதத்தில் முதல் தடுப்பூசியை போட்டுக் கொண்ட மாணவர்கள், தங்களது இரண்டாவது தடுப்பூசியை போட்டுக் கொள்ள குறைந்தபட்சம் ஆகஸ்ட் வரை காத்திருக்க வேண்டும். இது மாணவர்களின் சிரமங்களை அதிகரித்துள்ளது.

ஒவ்வொரு நாடும், தடுப்பூசி தொடர்பான வெவ்வேறு விதிமுறைகளை பின்பற்றுகின்றன. கனடாவை பொறுத்த வரையில், அங்கு செல்லும் நபர்கள், தடுப்பூசி பாதுகாப்பை முழுமையாக பெற்றிருந்தால் நாட்டிற்குள் செல்லலாம். தடுப்பூசி போடதவர்கள் மற்றும் ஒரு டோஸ் மட்டுமே போட்டுக் கொண்ட நபர்கள், குறிப்பிட்ட காலத்திற்கு தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும்.   

தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியவர்கள் சுமார் ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாய் செலவு செய்ய வேண்டியிருக்கும். இது மாணவர்களுக்கு நிதிச்சுமையை ஏற்படுத்தும். எனவே, தமிழக அரசு தங்களுக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும், இரண்டு தடுப்பூசிகளுக்கும் இடையிலான கால அவகாசத்தையும் பரிசீலிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்

Also Read | தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 26,513 பேர் பாதிப்பு, 490 பேர் உயிர் இழப்பு!!

இந்த விஷயத்தில், கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், தெலுங்கானா மாநில அரசுகள் முடிவுகளை எடுத்து, ஒரு முன்மாதிரியை உருவாக்கியுள்ளன.
எனவே, தமிழக அரசும் இந்த விஷயத்தில் நல்ல முடிவு சொல்ல வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.  

மற்றொரு பிரச்சினை என்னவென்றால், பாரத் பயோடெக்கின் உள்நாட்டு தடுப்பூசியான கோவாக்சினுக்கு உலக சுகாதார அமைப்பு (WHO) ஒப்புதல் அளிக்கவில்லை, இது ஒரு சில நாடுகளில் மட்டுமே சர்வதேச பயணங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கோவாக்சின் எடுத்தவர்களின் வெளிநாட்டு பயணங்களிலும் சிரமங்கள் எழலாம் என்ற அச்சமும் மாணவர்களிடையே எழுந்துள்ளன. 

தமிழக அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு முடிவெடுப்பது ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்திற்கு நன்மை தருவதாக இருக்கும்.

ALSO READ |  12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் எப்போது நடக்கும்? பதிலளித்தார் தமிழக கல்வி அமைச்சர்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News