சென்னை: மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியானதும், மருத்துவராகும் எண்ணம் நிறைவேறாது என்று தெரிந்த மாணவர்களில் சிலர் விபரீத முடிவுகளை எடுத்துள்ளனர். தேர்வு முடிவுகள் வெளியானதும், மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காது என்று தெரிந்த மாணவ மாணவியர்கள் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டதற்குக் இரங்கல் தெரிவித்த மதிமுக தலைவர் வைகோ, இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்கொலை செய்துக் கொண்ட மாணவர்களின் விவரங்களுடன் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ள அவர் நீட் தற்கொலையை முடிவுக்கு கொண்டு வருவது மத்திய அரசின் கையில் இருக்கிறது என்று வேண்டுகோள் விடுத்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை சூளைமேடு பகுதியில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுனரான கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மகன் தனுஷ் கடந்த ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தும் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. இந்த ஆண்டு மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த நிலையில் மன உளைச்சலில், கடந்த ஜூன் மாதம் தன்னால் முடியவில்லை என்று குரல் பதிவு செய்து வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


மேலும் படிக்க | NEET UG Result 2022 Declared: வெளியான நீட் தேர்வு ரிசல்ட்; எந்த மாநிலம் முதலிடம்?


சென்னை திருமுல்லைவாயில் இந்திரா நகரில் வசித்து வரும் மாணவி லக்ஷ்மணா ஸ்வேதா அதிகாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உயிரிழந்த மாணவி தற்போது பிலிப்பைன்ஸ் நாட்டில் எம்.பி.பி.எஸ் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


எப்படியாவது டாக்டர் ஆக வேண்டும் என்ற கனவோடு இருந்த லக்சனா சுவேதா, 2-ஆவது முறையாக கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற நீட் தேர்வை எழுதினார். தேர்வுக்கு பிறகு அவர் தனது தாயாரிடம் “நான் தேர்வை சரியாக எழுதவில்லை. மதிப்பெண்கள் குறைவாகத்தான் வரும் போல் இருக்கிறது“ என்று கூறியுள்ளார்.


நேற்று நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், இரண்டாவது முறையும் தோல்வி அடைந்ததால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார்.


மேலும் படிக்க | தமிழக அளவில் முதலிடம் பிடித்து மதுரை மாணவன் சாதனை


திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த வேலஞ்சேரி கிராமத்தை சேர்ந்த மணிவேல் என்பவரின் மகள் ஜெனி என்ற ஜெயசுதா, நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.


நீட் நுழைவுத்தேர்வு  திணிக்கப்பட்ட 2017 ஆம் ஆண்டில், அரியலூர் அனிதா தொடங்கி கடந்த ஆண்டு வரை 20 மாணவர்கள் உயிரைப்போக்கி கொண்ட நிலையில் ,நேற்று மாணவி லக்சனா சுவேதா  தற்கொலை செய்து கொண்டது வேதனை தருகிறது.


மேலும் படிக்க | TNPSC தேர்வில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு முறையில் முக்கிய மாற்றம்! நீதிமன்றம் அதிரடி


தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய நீட் விலக்கு சட்ட முன் வடிவுக்கு ஒன்றிய பா.ஜ.க அரசு அனுமதி தராமல் அலட்சியப் படுத்தி வருவதால். தமிழ்நாட்டில் மாணவர்களின் தற்கொலைகள் தொடரும் துயரமாக உள்ளது.


பா.ஜ.க அரசு இதில் வீண் பிடிவாதமாக இருப்பது கண்டனத்துக்கு உரியது. ஒன்றிய அரசு நீட் விலக்கு சட்டமுன் வரைவுக்கு அனுமதி அளிக்க வேண்டும். நீட் தேர்வில் தேர்ச்சி அடைய வாய்ப்பு இல்லாமல் போன மாணவக் கண்மணிகள் ,தற்கொலை எண்ணத்தை கைவிட வேண்டும்.


மருத்துவப் படிப்பு இல்லாவிடில் இன்னும் எத்தனையோ படிப்புகள் உள்ளன. அவற்றில் தேர்வு செய்து பயின்று. வாழ்வில் உயர முயற்சிக்க வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.


மேலும் படிக்க | வங்கியில் இருந்து கடனை மற்றொரு வங்கிக்கு மாற்றுவது இவ்வளவு சுலபமா? 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ