நாடு முழுவதும் 50 மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவற்றில் மொத்தம் 6 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ளன. இதனை மார்ச் மாதத்துக்குள் நிரப்புவதற்கு திட்டமிட்டுள்ள மத்திய அரசு, இதற்கான செயல்திட்டங்களை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய கல்வித்துறை அமைச்சகத்தில் செயல்படும் சிறப்புக்குழு, காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான செயல்முறைகளை கவனித்து வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | இன்டர்நெட் இல்லாமல் Google Map பயன்படுத்துவது எப்படி?


மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திரபிரதான் இதற்கான உத்தரவுகளை பிறபித்துள்ளதால், காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைகள் வேகமெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து பேசிய அரசுதுறை சார்ந்த ஒருவர், மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள இட ஒதுக்கீடு காலிப் பணியிடங்களை செப்டம்பர் 2022 ஆம் ஆண்டுக்குள் நிரப்ப வழிமுறைகளை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.


ALSO READ | முந்துங்கள்; iPhone 12 Pro இல் இதுவரை இல்லாத அளவிற்கு சிறப்பு தள்ளுபடி


கடந்த ஆண்டே, அதாவது நவம்பர் 30 ஆம் தேதிக்குள்ளாக இந்த காலிப் பணியிடங்களை நிரப்ப இலக்கு நிர்ணயித்து இருந்ததாகவும், ஆனால் பல்வேறு காரணங்களால் அதனை செயல்படுத்த முடியாமல் போனதால், இப்போது அதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஏற்கனவே, இட ஒதுக்கீடு பிரிவு காலிப் பணியிடங்கள் பல்வேறு மாநிலங்களில் நிரப்பப்படாமல் இருந்தது பெரும் சர்ச்சையாக உருவெடுத்திருந்தது. அதனால், அடுத்தடுத்து மாநில தேர்தல்கள் வரும் சூழலில் இந்த காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் முடுக்கிவிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.


 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR