முந்துங்கள்; iPhone 12 Pro இல் இதுவரை இல்லாத அளவிற்கு சிறப்பு தள்ளுபடி

நீங்கள் ஐபோன் 12 ப்ரோவை வாங்க நினைத்தால், அமேசானில் சில மணிநேரங்களுக்கு, இந்த ஸ்மார்ட்போன் 45 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடியில் கிடைக்கிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 1, 2022, 03:53 PM IST
முந்துங்கள்; iPhone 12 Pro இல் இதுவரை இல்லாத அளவிற்கு சிறப்பு தள்ளுபடி title=

புதுடெல்லி: இன்று 2022ம் ஆண்டின் முதல் நாள் ஆகும். இன்று, அமேசான் உங்களுக்கு புத்தம் புதிய சலுகையை வழங்குகிறது. அமேசானில் ஐபோன் 12 ப்ரோவில் சில மணிநேரங்களுக்குகாக பெரிய தள்ளுபடி வழங்கப்படுகிறது, இதன் மூலம் இந்த ஆப்பிள் ஸ்மார்ட்போனை ரூ.1,29,900 விலையில் மிக மலிவாக வாங்கலாம். இந்த போனில் கிடைக்கும் சலுகைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

iPhone 12 Pro இல் சிறந்த தள்ளுபடி
தற்போது ஐபோன் 12 ப்ரோவின் (iPhone 12 Pro) 256 ஜிபி மாறுபாட்டைப் பற்றி பேசுகையில், ரூ.1,29,900 விலையில் உள்ள இந்த ஐபோனில் 23% அதாவது 30 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது, அதன் பிறகு இதன் விலை ரூ.99,900 ஆக குறைந்துள்ளது. நீங்கள் விரும்பினால், இந்த ஸ்மார்ட்போனை EMI அல்லது நோ-காஸ்ட் EMIயிலும் வாங்கலாம்.

ALSO READ | ஊழல் புகாரில் சிக்கிய பிரதமர்..! பணியிடை நீக்கம் செய்த அதிபர்

எக்ஸ்சேஞ்ச் சலுகையுடன் iPhone 12 Pro இல் 45 ஆயிரம் வரை தள்ளுபடி கிடைக்கும்
இதுவரை கிடைத்த தகவலின்படி ஐபோன் 12 ஐ ரூ.1,29,900க்கு பதிலாக ரூ.99,900க்கு வாங்கலாம், அதாவது 30 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது தவிர, உங்கள் பழைய ஸ்மார்ட்போனுக்கு (Smartphone) மாற்றாக ஐபோன் 12 ப்ரோவை வாங்கினால், ரூ.14,900 வரை சேமிக்கலாம்.

இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனையும் நீங்கள் பெற்றால், ஒட்டுமொத்தமாக ஐபோன் 12 ப்ரோவில் ரூ.44,900 தள்ளுபடி கிடைக்கும், இதன் மூலம் ரூ.85 ஆயிரத்தில் இந்த ஆப்பிள் போனை வீட்டிற்கு எடுத்துச் செல்ல முடியும்.

iPhone 12 Pro அம்சங்கள்
ஐபோன் 12 ப்ரோவின் 256 ஜிபி மாறுபாடு பற்றி பேசுகையில். அதில், A14 பயோனிக் சிப்பில் வேலை செய்யும். இந்த ஐபோன் 12MP அல்ட்ரா-வைட், வைட் மற்றும் டெலிஃபோட்டோ கேமராக்கள், 4x ஆப்டிகல் ஜூம் ரேஞ்ச், 12MP TrueDepth முன் கேமரா மற்றும் 4K Dolby Vision HDR ரெக்கார்டிங் ஆகியவற்றைப் பெறும். 5ஜி சேவைகளை ஆதரிக்கும் இந்த ஆப்பிள் ஐபோன் 6.1 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளேவுடன் வருகிறது மற்றும் இது டூயல் சிம் போன் ஆகும்.

ALSO READ | உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு நீதிபதியை உருவாக்கியுள்ளது சீனா..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News