CUET PG 2022: முதுநிலை பட்டப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு பதிவு தொடங்கியது
முதுகலை பட்டப்படிப்புக்கான பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் CUET NTAக்கு விண்ணப்பிக்கலாம்
CUET PG 2022: பதிவு செயல்முறை 19 மே 2022 முதல் தொடங்கியது. cuet nta என்ற அதிகாரப்பூர்வ தளத்தின் மூலம் விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தேர்வு ஜூலை 2022 கடைசி வாரத்தில் நடத்தப்படும்.
CUET PG 2022: NTA, CUET PG 2022க்கான பதிவு செயல்முறை நேற்று (2022 மே 19) தொடங்கிவிட்டது. பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் CUET NTAஇன் அதிகாரப்பூர்வ தளமான cuet.nta.nic.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 18 ஜூன் 2022 என்று அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.
CUET PG தேர்வு ஜூலை 2022 கடைசி வாரத்தில் கணினி அடிப்படையிலான முறையில் நடத்தப்படும். 2022-2023 ஆம் ஆண்டுக்கான கல்வி அமர்வுக்கு 42 மத்திய மற்றும் பங்கேற்கும் பல்கலைக்கழகங்களுக்கான முதுகலை நுழைவுத் தேர்வை இந்த நிறுவனம் நடத்துகிறது.
நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை CUET ஒற்றைச் சாளர வாய்ப்பை வழங்குகிறது.
CUET PG 2022க்கு எப்படி விண்ணப்பிப்பது
தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பிக்கலாம்.
1. CUET NTA இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான cuet.nta.nic.in ஐப் பார்வையிடவும்.
2. CUET PG 2022 இணைப்பு முகப்புப் பக்கத்தில் உள்ளது.
3. உள்நுழைவு விவரங்களை உள்ளிட்டு சமர்ப்பிக்கவும்.
4. அதன் பிறகு விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து விண்ணப்பக் கட்டணத்தைச் சமர்ப்பிக்கவும்.
5. முடிந்ததும் சமர்ப்பி பொத்தானை அழுத்தவும்.
6. உங்கள் விண்ணப்பப் படிவம் சமர்ப்பிக்கப்படும்.
7. உறுதிப்படுத்தல் பக்கத்தைப் பதிவிறக்கம் செய்து, மேலும் குறிப்புக்காக அதன் பிரிண்ட் அவுட்டை எடுக்கவும். =
இந்த நுழைவுத் தேர்வு தொடர்பாக, NTA CUET இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கூடுதல் தகவல்களைப் பெறலாம்.
மேலும் படிக்க | அரசு மருத்துவமனை அழுகி கிடந்த பெண் சடலம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR