டெல்லி கோச்சிங் செண்டர்களின் கேள்விகள் ஐஏஎஸ் தேர்வில் கேட்கப்படுகிறதா? பகீர் புகார்
UPSC IAS Mains 2022: சிவில் சர்விஸ் தேர்வுகளின் முதன்மைத் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி அவ்னீஷ் சரண் தெரிவித்த கருத்து பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது
UPSC IAS Mains 2022: சிவில் சர்விஸ் தேர்வுகளின் முதன்மைத் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி அவ்னீஷ் சரண் தெரிவித்த கருத்து பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. இதுவரை ஐஏஎஸ் மெயின் தேர்வில் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளும் எங்கிருந்து கேட்கப்பட்டன என்பது தொடர்பாக, ஐஏஎஸ் அவ்னிஷ் சரண் ட்வீட் செய்துள்ளார். அதில், சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வில் இதுவரை நடைபெற்ற தேர்வுகளில் அனைத்து தாள்களின் கேள்விகளும் டெல்லியில் உள்ள அனைத்து பயிற்சி மையங்களின் வகுப்பறைகள் மற்றும் தேர்வுத் தொடர்களில் கேட்கப்பட்ட கேள்விகளிலிருந்து வந்ததாக அவ்னிஷ் ஷரன் கூறினார். இது மிகப் பெரிய முறைகேடாக இருக்கலாம் என்ற அச்சங்கள் தற்போது எழுந்துள்ளது.
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நடத்தும் சிவில் சர்வீசஸ் மெயின்ஸ் தேர்வு (UPSC IAS Mains 2022) செப்டம்பர் 16 முதல் நடந்து வருகிறது. இதுவரை மெயின் தேர்வில் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளும் எங்கிருந்து கேட்கப்பட்டன என்று அவர் கூறும் தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன.
ஐஏஎஸ் அதிகாரி அவ்னிஷ் ஷரனின் இந்த ட்வீட்டிற்குப் பிறகு, பல தொடர் கேள்விகள் கேட்கப்படுகின்றன. சில மாணவர்கள் இதை ஒரு கிண்டலாகப் பார்க்கிறார்கள், சிலர் இது உண்மையா என்று கேட்கிறார்கள். ஆனால், இந்தக் கேள்விகளுக்கான பதில்களை அவ்னீஷ் ஷரண் இதுவரை தெரிவிக்கவில்லை. ஆனால், டெல்லியில் நடத்தப்பட்டு வரும் கோச்சிங் செண்டர்களில் படிக்கும் மாணவர்களுக்கு சாதகமானதாக தேர்வு இருக்கும் என்றால், நாடு முழுவதும் உள்ள பிற மாணவர்களுக்கு நடைபெறும் அநீதியல்லவா இது என கேள்விகள் எழுகின்றன.
மேலும் படிக்க | லட்சாதிபதி ஆசையில் 27 லட்சம் பறிகொடுத்த ஜெய்ப்பூர் இளைஞர்
UPSC CSE மெயின்ஸ்: தேர்வு முடிவுகள்
UPSC மெயின் தேர்வு செப்டம்பர் 16 முதல் செப்டம்பர் 25 வரை நடைபெறுகிறது. தற்போது மெயின் தேர்வு நடந்து வருகிறது. மெயின் தேர்வு நாடு முழுவதும் செப்டம்பர் 16, 17, 18, 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் கலந்துகொள்ளவிருக்கும் விண்ணப்பதாரர்கள் upsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று தேர்வின் அட்டவணையைப் பார்க்கலாம்.
UPSC தேர்வுக்கான குறிப்புகள்
ஐஏஎஸ் அவனிஷ் சரண் சமீபத்தில் யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு டிப்ஸ் வழங்கினார். மாணவர்கள் எப்படி தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார். பரீட்சைக்கு 10 நாட்களுக்கு முன்பு எழுதுவதை விட வாசிப்பில் கவனம் செலுத்துவது அவசியம் என்று அவர் கூறினார். தான் தேர்வுக்கு தயாராகும் போது 15-16 மணி நேரம் தொடர்ந்து படிப்பதை வழக்கமாக கொண்டிருந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
மேலும் படிக்க | UPSC Recruitment 2022: UPSC-யில் பல்வேறு பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு
அவ்னீஷ் சரண் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர்
அவ்னிஷ் ஷரன் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஐஏஎஸ் அதிகாரி. அவருக்கு ட்விட்டரில் 4.7 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் உள்ளனர். தினமும் மாணவர்களுக்கு யுபிஎஸ்சி தேர்வு தொடர்பான டிப்ஸ்களை வழங்கி மக்களை ஊக்கப்படுத்தி வருகிறார்.
சில நாட்களுக்கு முன்பு அவர் சமூக ஊடகங்களில் தனது மதிப்பெண் பட்டியலைப் பகிர்ந்து கொண்டார், அதில் அவர் உயர்நிலைப் பள்ளியில் மூன்றாம் வகுப்பில் தேர்ச்சி அடைந்திருப்பதாக தெரிவித்தார்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ