CBSE 10, 12 வகுப்புகளுக்கான தேர்வுகள் எப்போது? கல்வி அமைச்சர் அறிவிக்கிறார்
சி.பி.எஸ்.சி 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வுத் தேதிகள் தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் பெரிய அறிவிப்பை வெளியிடுகிறார்.
புதுடெல்லி: சி.பி.எஸ்.சி 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வுத் தேதிகள் தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் பெரிய அறிவிப்பை வெளியிடுகிறார்.
முன்னதாக, சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு, 12 வாரியத் தேர்வுகள் 2021 மே 4 முதல் ஜூன் 10 வரை நடைபெறும் என்று மத்திய கல்வி அமைச்சர் போக்ரியால் (Ramesh Pokhriyal) அறிவித்திருந்தார்.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) பிப்ரவரி 2ஆம் நாளன்று 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான தேர்வு அட்டவணையை அறிவிக்கும் என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் 'நிஷாங்க்' ஜனவரி 28ஆம் தேதி வியாழக்கிழமையன்று அறிவித்தார்.
முன்னதாக, சிபிஎஸ்இ 10, 12 வாரியத் தேர்வுகள் 2021 மே 4 முதல் ஜூன் 10 வரை நடைபெறும் என்று கல்வி அமைச்சர் போக்ரியால் அறிவித்திருந்தார். கல்வி அமைச்சர் இந்த அறிவிப்பை நேரலையில் வெளியிட்டார். அதோடு, ஜூலை 15 ஆம் தேதி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.
தேர்வுகளுக்கான அட்டவணை வெளியிட்ட பிறகு, அவை சிபிஎஸ்இ வலைதளத்தில் கிடைக்கும். CBSE-இன் அதிகாரப்பூர்வ இணையதளம் - https://www.cbse.nic.in/.
Also Read | CBSE 10, 12 வகுப்பு 2021 பொதுத்தேர்வுக்கான தேதி அறிவிப்பு
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR