UPSC தேர்வு நாட்டின் கடினமான போட்டித் தேர்வுகளில் ஒன்றாகும். இதில் வெற்றிபெற, கட்டாயம் பயிற்சி அவசியம். பெரும்பாலானோர் தனியார் பயிற்சி மையங்களில் தங்கிப் படித்து தேர்வுக்கு தயாராகுகிறார்கள். சிலர் தனியார் மையங்களில் இருக்கும் கட்டணம் செலுத்த முடியாமல் பாதியில் பயிற்சியை கைவிடுபவர்களும் இருக்கின்றனர். சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புற மாணவர்கள் அத்தகைய கட்டண பயிற்சிகளை பெறுவது என்பது இயலாத காரியம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்படிப்பட்ட சூழ்நிலையில் அலகாபாத் மத்திய பல்கலைக்கழகம் ஒரு பெரிய முயற்சியை எடுத்துள்ளது. அலகாபாத் மத்திய பல்கலைக்கழகம் யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகும் எஸ்சி பிரிவினருக்கு இலவச பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்துள்ளது. நிதி நிலை மிகவும் பலவீனமாக இருக்கும் அல்லது வேறு எந்த காரணத்திற்காகவும் UPSC பயிற்சி நிறுவனங்களின் விலையுயர்ந்த கட்டணத்தை செலுத்த முடியாத விண்ணப்பதாரர்களுக்கு இது பயனளிக்கும்.


மேலும் படிக்க | பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு NABARD வங்கியில் வேலைவாய்ப்பு!


அலகாபாத் மத்தியப் பல்கலைக்கழகத்தில் டாக்டர் அம்பேத்கர் சிறப்புக்கான மையம் நிறுவப்பட்டுள்ளது. இதில் முதல் கட்ட இலவச பயிற்சி அக்டோபர் 2022 முதல் தொடங்கப்படும். எஸ்சி மாணவர்களுக்கு யுபிஎஸ்சிக்கான இலவசப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு கொடுக்கப்பட்ட அறிவிப்பில் எஸ்சி பிரிவைச் சேர்ந்த 545 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில் 517 பேரின் விண்ணப்பங்கள் சரியானவை எனக் கண்டறியப்பட்டது. அந்த விண்ணப்பங்களை தீவிரமாக பரிசீலித்து 204 பேர் நுழைவுத் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கவுன்சிலிங் நடத்தப்பட்டு, அதில் 100 மாணவர்கள் இலவச பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு 1 ஆண்டு இலவச பயிற்சி அளிக்கப்படும்.


அலகாபாத் மத்திய பல்கலைக்கழகம் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதேபோல் நாடு முழுவதும் உள்ள 31 மத்திய பல்கலைக்கழகங்களும் இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளனர். இதன்படி தேர்வு பெறும் மாணவர்களுக்கு யுபிஎஸ்சி பயிற்சி வழங்கப்பட இருக்கிறது. மாணவர்களுக்கு பயிற்சி வழங்குவதற்காக பாட வல்லுநர்களும் பணியமர்த்தப்பட இருக்கின்றனர். அவர்களுக்கு மாதம் ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ், ஐஎப்எஸ் அதிகாரிகளும் பங்கேற்று பயிற்சி கொடுக்க இருக்கின்றனர். சிறப்பு பயிற்சியில் பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுகீடும் முறையும் பின்பற்றப்படுகிறது. 


மேலும் படிக்க | தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை TNEA 2020 தரவரிசை பட்டியல் வெளியீடு: tneaonline.org இல் சரிபார்க்கவும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ