சென்னை: தமிழகத்தில் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு சில நாட்கள் ஆகிவிட்டது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் உள்ள 143 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதேபோல, பொறியியல் படிப்பில் பி.இ, பி.டெக் ஆகியப் படிப்புகளில்  சேர்வதற்கு மாணவர்கள் நாளை முதல் ஆகஸ்ட் 24ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. http://tneaonline.org  & http://tndte.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.


செப்டம்பர் நான்காம் தேதியன்று தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். ஆகஸ்ட் 25ஆம் தேதியன்று ரேண்டம் எண் வெளியாகும். செப்டம்பர் 7 முதல் அக்டோபர் நான்காம் தேதிவரை கலந்தாய்வு நடைபெறும். அக்டோபர் மாதம் 20க்குள் கலந்தாய்வை முடித்து மாணவர் சேர்க்கை தொடங்கப்படும் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.


Also Read | OPS அவசர தில்லி பயணம்; அரசியல் பரபரப்பிற்கான காரணம் என்ன..!!


முன்னதாக, ஜூலை 31 ந் தேதிக்கு பின் தமிழகத்தின் அனைத்து கல்லூரிகளிலும் மாணவர்கள் சேர்ச்கை தொடங்கும் என்று உயர்கல்வி அமைச்சர் கே.பொன்முடி தெரிவித்திருந்தார். 


தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு, வகுப்புகள் ஆன்லைனில் நடைபெற்றன. கொரோனா தொற்றின் 2-வது அலை குறைந்திருப்பதை அடுத்து, மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவில் தளர்வு செய்யப்பட்டுள்ளன.


இதையடுத்து, 2021-2022 கல்வியாண்டிற்கான மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து 143  கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது.



கல்லூரிகளுக்காக மாணவர்கள் சேர்க்கை ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, நாளை முதலே கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு மாணவர்களுக்கும், பெற்றோர்களுகும் மட்டுமல்ல, கல்லூரிகளுக்கும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.


சிபிஎஸ்இ மற்றும் மாநில வாரியத்தில் படிக்கும் மாணவர்களின் மதிப்பீட்டு அளவுகோலின் அடிப்படையிலான பன்னிரெண்டாம் வகுப்பு முடிவுகளை ஜூலை 31 க்குள் அறிவிக்கப்படும். கல்லூரி சேர்க்கைகளுக்காக மாணவர்களை தரவரிசைப்படுத்த வேண்டும். 


Also Read | பெண்கள் இலவச பேருந்து பயணம்; அரசு முக்கிய அறிவிப்பு வெளியீடு


சிபிஎஸ்இ மற்றும் மாநில வாரியத்தில் படித்த மாணவர்களின் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையிலேயே கல்லூரி சேர்க்கை நடைபெறுவதால் ஜூலை 31க்கு பிறகு கல்லூரி சேர்க்கை நடைபெறும் என்றும், அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, முதலமைச்சர் ஸ்டாலினுடான சந்திப்புக்கு பிறகு தெரிவித்திருந்தார்.  


சில தனியார் கல்லூரிகள் ஏற்கனவே மாணவர் சேர்க்கைகளைத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியானதை அடுத்து, பன்னிரெண்டாம் வகுப்பு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னரே கல்லூரி சேர்க்கை தொடங்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார். அதை மீறி மாணவர் சேர்க்கை நடத்தும் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. 


இருந்தபோதிலும், அரசு அறிவித்த மதிப்பீட்டு முறையின்படி, பத்தாம் வகுப்பு மாணவர்களின் ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் பாலிடெக்னிக் படிப்புகளுக்கான சேர்க்கை ஏற்கனவே தொடங்கிவிட்டது.  


ALSO READ | ஆகஸ்ட் 2ம் தேதி சட்டப்பேரவையில் கலைஞர் படத்திறப்பு விழா


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR