JEE Main 2021 Answer Key: தேசியத் தேர்வு ஆணையமான NTA விரைவில் JEE Main 2021 தேர்வின் முடிவுகள் மற்றும் ஆன்சர் கீயையும் வெளியிடும் என தெரிவித்திருந்த நிலையில், 2021 ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் 23 முதல் 26 வரை நடைபெற்ற ஜேஇஇ மெயின் தேர்வின் உத்தேச விடைக் குறிப்பை (JEE Main 2021 Answer Key) தேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜேஇஇ மெயின் 2021 தேர்வின் விடைக் குறிப்பை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் jeemain.nta.nic.in வெளியிடப்பட்டுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த உத்தேச விடைகளில், உங்களுக்கு ஏதேனும் முறையீடு செய்ய வேண்டும் என நினைத்தால், மாணவ-மாணவிகள் ரூ. 200 கட்டணம் செலுத்தி முறையீடு செய்யலாம். இந்த கட்டணம் திருப்பிச் செலுத்தப் படமாட்டாது. மாணவர்கள் எழுப்பிய ஆட்சேபனைகளை கருத்தில் கொண்டு ஜே.இ.இ மெயின் 2021 (JEE Main 2021) இன் இறுதி பதில் விசை வெளியிடப்படும். 


ALSO READ |  JEE Main தேர்வு 4 மாதங்களில் நடைபெறும். தமிழ் உள்ளிட்ட 14 மொழிகளில் தேர்வு எழுதலாம்


JEE முதன்மை 2021 பதில் விசை: சரிபார்க்க வேண்டிய படிகள் (Steps to check for JEE Main 2021 Answer Key):
1. அதிகாரப்பூர்வ வலைத்தளமான jeemain.nta.nic.in ஐப் பார்வையிடவும்.
2. 'JEE Main 2021 answer key' என இருக்கும் இணைப்பைக் கிளிக் செய்யவும்.
3. உங்கள் விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும்.
4. உங்கள் JEE முதன்மை 2021 பதில் விசை திரையில் காண்பிக்கப்படும்.
5. உங்கள் முடிவைப் பதிவிறக்கி, எதிர்கால தேவைக்காக நகல் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.


பிப்ரவரி 23, 24, 25, மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட முதல் கட்ட தேர்வில் சுமார் 95 சதவீத மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆண்டு, JEE Main தேர்வுகள் நான்கு கட்டங்களாக (பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மற்றும் மே) நடைபெறுகிறது.


ALSO READ |  திருத்தப்படுகிறதா 2021 JEE Main, NEET syllabus: என்ன கூறுகிறது கல்வி அமைச்சகம்


பிப்ரவரியில் நடந்த JEE Main தேர்வுகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு மாணவர்கள் மார்ச் மாத அமர்வுக்கு பதிவு செய்ய வேண்டும். மார்ச் மாத தேர்வுகள் மார்ச் 15, 16, 17 மற்றும் 18 ஆகிய நான்கு நாட்களில் 2 ஷிப்டுகளில் நடத்தப்படும். முதல் ஷிப்ட் காலை 9 மணி முதல் 12 மணி வரையும் இரண்டாவது ஷிப்ட் மாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரையும் நடக்கும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR