ICF Railway Recruitment 2022: சென்னையில் 876 ரயில்வே காலிப்பணியிடங்கள்
சென்னையில் இருக்கும் ரயில்வே பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையான ஐசிஎப்பில் 876 காலிப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
ICF Railway Recruitment 2022: சென்னையில் இருக்கும் இன்டெக்ரல் கோச் ஃபேக்டரியில் (ஐசிஎஃப்), 876 அப்ரண்டிஸ் பதவிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட டிரேடுகளில் ஐடிஐ சான்றிதழுடன் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பொன்னான வாய்ப்பு பயன்படுத்திக்கொள்ளுங்கள். ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ICF பயிற்சி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து 26 ஜூலை ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
தேசிய வர்த்தகச் சான்றிதழுடன் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் அறிவியல் மற்றும் கணிதத்துடன் பத்தாம் வகுப்பு உட்பட தேவையான கல்வித் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள், ICF ரயில்வே ஆட்சேர்ப்பு 2022-க்கு விண்ணப்பிக்கலாம்.
மேலும் படிக்க | SCI Recruitment 2022: இந்திய உச்ச நீதிமன்ற வேலைவாய்ப்புகள்: 210 பேருக்கு வாய்ப்பு
வேலைவாய்ப்பு முழு விவரம்
காலிப்பணியிடம் - 876
கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். சில படிப்புகளுக்கு கேட்கப்படும் துறைகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
உதவியாளர் பணியிடத்துக்கு வகுப்பு X தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினி ஆபரேட்டர் மற்றும் புரோகிராமிங் அசிஸ்ட் டிரேடில் தேசிய வர்த்தகச் சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும். தேசிய தொழிற்பயிற்சி கவுன்சில் அல்லது ஓராண்டு மற்றும் அதற்கு மேல் உள்ள தொழிற்பயிற்சிக்கான சான்றிதழை பெற்றிருக்க வேண்டும்.
ஃபிட்டர், எலக்ட்ரீஷியன் & மெஷினிஸ்ட் பணியிடத்துக்கு 10+2 அமைப்பின் கீழ் அறிவியல் மற்றும் கணிதத்துடன் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கார்பெண்டர் & பெயிண்டர்: 10+2 முறையின் கீழ் குறைந்தபட்சம் 50% மொத்த மதிப்பெண்களுடன் அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வெல்டர்: 10+2 சிஸ்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 50% மொத்த மதிப்பெண்களுடன் அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது; 15 முதல் 24 வயது (அரசு விதிகளின்படி தளர்வுகள் உண்டு)
ICF ரயில்வே ஆட்சேர்ப்பு 2022 அறிவிப்பு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்
மேலும் படிக்க | பி.இ படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை வாய்ப்பு
எப்படி விண்ணப்பிப்பது?
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம்-pb.icf.gov.in மூலம் 26 ஜூலை 2022 அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்; ரூ.100 செலுத்த வேண்டும். SC/ST/PwBD/Women ஆகியோருக்கு கட்டணம் இல்லை
ஊதியம்; 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் ரூ.10 ஆயிரம். 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.7,000. ஐடிஐ முடித்தவர்களுக்கு மாதம் 7,000.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR