உவர்நீர் மீன் வளர்ப்பு மத்திய நிறுவனம் (CIBA) தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Young Professional-I பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது.
காலி பணியிட விவரம்:
தற்போது வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, Young Professional-I பணிக்கு என மொத்தமாக ஒரு பணியிடம் மட்டும் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது.
CIBA கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய Computer Science / Information Technology / Computer Application பாடப்பிரிவில் BE / B.Tech டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய Computer Science / Information Technology / Computer Application பாடப்பிரிவில் MCA / M.Sc டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
CIBA அனுபவ விவரம்:
விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட மற்றும் படிப்புக்கு தகுந்த துறைகளில் குறைந்தது ஓராண்டு பணிபுரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பதாரர்களுக்கு PHP மற்றும் MYSQL தெரிந்திருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
CIBA வயது விவரம்:
இப்பணிக்கு ஆண் விண்ணப்பதாரர்களுக்கு 35 வயது மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு 40 வயது என அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் இப்பணிக்கு அரசு விதிமுறைப்படி வயது தளர்வுகள் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
CIBA ஊதிய விவரம்:
விண்ணப்பதாரர்கள் தேர்வான பின் பணியின்போது மாத ஊதியமாக ரூ.25,000 பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
CIBA தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் Shortlist செய்யப்பட்டு அதன் பின் நேரடியாக நேர்முகத் தேர்வின் வாயிலாக தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் இப்பணிக்கான நேர்முகத் தேர்வுகள் குறித்த கூடுதல் விவரங்கள் Shortlist செய்யப்படும் நபர்களுக்கு தனிப்பட்ட முறையில் தெரிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
CIBA விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் http://www.ciba.res.in/wp-content/uploads/2022/06/CIBA-Library.pdf என்ற தளத்தில் இருக்கும் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து சரியாக பூர்த்தி செய்து r.saraswathy@icar.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 30.06.2022 என்கிற இறுதி நாளுக்குள் அனுப்ப வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR