SCI Recruitment 2022: இந்திய உச்ச நீதிமன்றத்தில் பணிபுரிய விருப்பமா? ஜூனியர் கோர்ட் அசிஸ்டெண்ட் பதவிகளுக்கான ஆளெடுப்பு நடைமுறை தொடங்கியிருக்கிறது.
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான sci.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பதிவு செயல்முறை தொடங்கிவிட்டது. விண்ணப்பிக்க இறுதி நாள் ஜூலை 10, 2022.
210 காலிப் பணியிடங்களை நிரப்பும் இந்த ஆட்சேர்ப்பு திட்டம் தொடர்பான கல்வித் தகுதி, தேர்வு செயல்முறை மற்றும் பிற விவரங்களை இங்கே பார்க்கலாம்.
மேலும் படிக்க | Indian Army Recruitment: இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு
முக்கியமான தேதிகள்
பதிவு செயல்முறை தொடங்கும் நாள்: ஜூன் 18, 2022
பதிவு செயல்முறை முடிவடையும் நாள்: ஜூலை 10, 2022
இந்திய உச்ச நீதிமன்ற பணிக்கு நிரப்பப்படவிருக்கும் காலியிட விவரங்கள்
நீதிமன்ற ஜூனியர் உதவியாளர்: 210 பணியிடங்கள்
இந்திய உச்ச நீதிமன்ற வேலைகள் 2022 க்கு விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்
இந்திய உச்ச நீதிமன்ற ஆட்சேர்ப்பு 2022 தகுதி அளவுகோல்கள்
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் இளங்கலை பட்டம்.
கணினியில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யத் தெரிந்திருக்க வேண்டும். தட்டச்சில் குறைந்தபட்ச வேகம் ஒரு நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் இருக்கவேண்டும்
கணினியை இயக்கத் தெரிந்திருக வேண்டும்.
இந்திய உச்ச நீதிமன்ற ஆட்சேர்ப்பு 2022 தேர்வு செயல்முறை
உச்ச நீதிமன்ற பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி, வயது வரம்பு மற்றும் தேர்தல் செயல்முறை ஆகியவற்றை தெரிந்துக் கொள்ளுங்கள்.
இந்திய உச்ச நீதிமன்ற ஆட்சேர்ப்பு 2022 வயது வரம்பு
2022 ஜூலை 1ம் நாளன்று விண்ணப்பதாரர்களின் வயது 18க்கு அதிகமாகவும் 30க்கு குறைவாகவும் இருக்க வேண்டும்.
மேலும் படிக்க | ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணிகளுக்கான வேலைவாய்ப்பு
இந்திய உச்ச நீதிமன்ற ஆட்சேர்ப்பு 2022 விண்ணப்பக் கட்டணம்
பொது/ஓபிசி விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும்.
எஸ்சி/எஸ்டி/முன்னாள் ராணுவத்தினர்/மாற்றுத்திறனாளிகள்/சுதந்திரப் போராட்ட வீரர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.250 செலுத்தினால் போதும்.
இந்திய உச்ச நீதிமன்ற ஆட்சேர்ப்பு 2022 எப்படி விண்ணப்பிப்பது?
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஜூலை 10, 2022 க்கு முன் sci.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை வெற்றிகரமாக சமர்ப்பித்த பிறகு, விண்ணப்பதாரர், முறையாகச் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
உச்சநீதிமன்றத்தில் பணி என்பதால் இந்தியத் தலைநகர் டெல்லியில் வேலை பார்க்க வேண்டியிருக்கும்.
மேலும் படிக்க: 'அக்னிபாத்' திட்டத்தால் பற்றி எரியும் வட மாநிலங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQY