சென்னை: சென்னைக்கு அருகில் உள்ள IGCAR கல்பாக்கத்தில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் (BARC) பயிற்சிப் பள்ளியில் இருந்து 30 க்கும் மேற்பட்ட பயிற்சி அறிவியல் அதிகாரிகள் (தொகுப்பு 14 மற்றும் 15 பேர்) அணு அறிவியல் மற்றும் பொறியியல் ஏழு பிரிவுகளில் ஓராண்டு நோக்குநிலை மற்றும் பயிற்சியை முடித்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவின் அணுசக்தித் திட்டத்தின் தந்தை டாக்டர் ஹோமி பாபாவால் தொடங்கப்பட்டது இந்த பயிற்சிப் பள்ளி என்பது குறிப்பிடத்தகக்து. நாடு முழுவதும் உள்ள அணு ஆற்றல் பயிற்சிப் பள்ளிகள், இந்தியாவின் அணுசக்தித் திட்டத்தை முன்னெடுத்துச் சென்ற பயிற்சிப் பள்ளிகள் 1957ஆம் ஆண்டு முதல் பயிற்சியளித்து வருகின்றன. இதுவரை 40,000 க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளன.


மெக்கானிக்கல் இன்ஜினியரிங், கெமிக்கல் இன்ஜினியரிங், ஃபாஸ்ட் ரியாக்டர் டெக்னாலஜி, ஃபாஸ்ட் ரியாக்டர் டெக்னாலஜி (Mechanical Engineering, Chemical Engineering, Fast Reactor Technology), எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ரூமென்டேஷன், நியூக்ளியர் ரியாக்டர் பிசிக்ஸ் மற்றும் நியூக்ளியர் ஃபியூவல் சைஸ் போன்ற துறைகளில் இந்த பட்டாதாரிகள் தங்கள் பயிற்சியை முடித்துள்ளனர்.


Also Read | பொறியியல், மருத்துவ படிப்புகளுக்கு கடன் பெறுவது சுலபம்!


அணுசக்தி ஆணையம் மற்றும் விண்வெளி ஆணையத்தில் தற்போது தலைமை பொறுப்பில் இருக்கும் பலர் இந்தப் பயிற்சிப் பள்ளியில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


சென்னைக்கு அருகில் உள்ள IGCAR வளாகத்தில், 20 பயிற்சியாளர்களுடன் செப்டம்பர் 2006 இல் தொடங்கப்பட்ட பயிற்சிப் பள்ளி, இந்திய அணுசக்தித் துறையின் (India’s Department of Atomic Energy(DAE)) பல்வேறு பிரிவுகளில் 550 பயிற்சியாளர்களை அமர்த்தியுள்ளது என்று பயிற்சிப் பள்ளியின் இயக்குனர் டாக்டர். பி. வெங்கட்ராமன் தெரிவித்தார்.


பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட மூத்த விஞ்ஞானிகள், இளம் விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் DAE இன் பிற பிரிவுகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். அதிகாரிகள் தங்கள் பல்வேறு திட்டங்களில் கவனம் செலுத்துவதற்கு தகவமைப்புத் திறனை எளிதாக்குகிறது இந்திய அணுசக்தித் துறை என்பது குறிப்பிடத்தக்கது.


Also Read | மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! மருத்துவப் படிப்பு இட ஒதுக்கீடு அமலுக்கு வருகிறது


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR