கொரோனா வைரஸ் கோவிட் -19 தொற்றுநோயால் 2021 ஆம் ஆண்டில் 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு தேர்வுகளின் அட்டவணையை CBSE மாற்றக்கூடும் என்று யூகங்கள் பரவி வருகின்றன. முன்னதாக, தொற்றுநோய் காரணமாக CBSE மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை (CTET) ஒத்திவைத்திருந்தது. இப்போது CTET தேர்வு 2021 ஜனவரி 31 ஆம் தேதி நடைபெறும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

CBSE சமீபத்தில் மதிப்பெண் திட்டத்துடன் சமீபத்திய மாதிரி வினாத்தாள்களை வெளியிட்டது. இது, CBSE சரியான நேரத்தில் தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளது என்ற ஊகங்களுக்கு வழிவகுத்தது.


CBSE வெளியிட்டுள்ள சமீபத்திய மாதிரி வினாத்தாளில் மதிப்பெண் செயல்முறையும் உள்ளது. இதனால் CBSE வழக்கம் போல் தேர்வுகளை முன்னரே நடத்திவிடும் என ஊகங்கள் கிளம்பியுள்ளன.


குறைக்கப்பட்ட CBSE பாடத்திட்டத்தின்படி CBSE இந்த மாதிரி வினாத்தாளை தயாரித்துள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த மாதிரி வினாத்தாள்கள் பொதுத் தேர்வுகளை எழுதவிருக்கும் மாணவர்களுக்கு CBSE மேற்கொள்ளும் தேர்வு செயல்முறையை குறித்த ஒரு கண்ணோட்டத்தை அளிக்கும்.


CBSE 12 ஆம் வகுப்புக்கான 2021 ஆம் ஆண்டின் பொதுத் தேர்வுகளுக்கான (Board Exams) அட்டவணையை சில நாட்களில் வெளியிட தயாராக இருப்பதாக பல ஊடக அறிக்கைகள் கூறியுள்ளன. டேட் ஷீட் எனப்படும் இந்த அட்டவணையில், தேர்வுகளுக்கான அனைத்து முக்கிய தேதிகள் பற்றிய தகவல்களும் இருக்கும்.


இதை CBSE வெளியிட்டவுடன், மாணவர்கள் இதை cbse.nic.in இல் சரிபார்க்கலாம்.


ALSO READ: 2021 ஆம் ஆண்டின் 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை வழக்கத்தை விட முன்னதாக நடத்தவுள்ளதா CBSE?


COVID-19 காரணமாக CBSE 12 ஆம் வகுப்பு ப்ராக்டிகல் தேர்வுகள் ரத்து செய்யப்படலாம் என்று சில அறிக்கைகள் கூறின. CBSE ஏற்கனவே CBSE 12 ஆம் வகுப்பு ப்ராக்டிகல் தேர்வுக்கான பாடதிட்டத்தை சுருக்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


கொரோனா வைரஸ் தொற்று பரவல் மற்றும் அதனால் விதிக்கப்பட்ட லாக்டௌன் காரணமாக, நாடு முழுவதும் பள்ளிகள் 6 மாதங்களுக்கும் மேலாக வழக்கமான முறையில் நடக்காமல் இருந்ததால், பாடத்திட்டத்தை குறைக்க அல்லது தேர்வுகளை 45 முதல் 60 நாட்கள் வரை தாமதப்படுத்த CBSE திட்டமிட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.


COVID-19 தொற்றுநோயால் பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டிருப்பதைக் கருத்தில் கொண்டு, அடுத்த ஆண்டு CBSE பொதுத் தேர்வுகளை (Board Exams) ஒத்திவைக்க தேசிய தலைநகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பள்ளி தலைம ஆசிரியர்கள் ஆதரவாக இல்லை என்று செய்தி நிறுவனமான பி.டி.ஐ தெரிவித்துள்ளது.


ALSO READ: நவ., 17 மீண்டும் பள்ளிகளை திறக்க வாய்பே இல்லை: கவித்துறை அமைச்சர் திட்டவட்டம்!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR