நீட் தேர்வை எழுதிய அரியலூர் மாவட்டம் சாத்தம்பாடியை சேர்ந்த கனிமொழி என்ற மாணவி தற்கொலை செய்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த ஞாயிறன்று நடைபெற்ற நீட் தேர்வை எழுதியிருக்கிறார் கனிமொழி. ஆனால், தேர்வு எழுதிய பிறகு மிகவும் சோர்வாக காணப்பட்டதாக அவரது பெற்றோர்கள் கூறுகின்றனர். தேர்வு முடிவு எப்படியிருக்குமோ என்ற அச்சத்தின் காரணமாக  தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படுகிறது.


பணிரெண்டாம் வகுப்புத் தேர்வில் 600க்கு 562 மதிப்பெண்களை எடுத்திருந்தார் கனிமொழி. தகுதித் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தும் நீட் நுழைவுத் தேர்வு அச்சத்தினால் மாணவி கனிமொழி தற்கொலை செய்துக் கொண்டது நீட் தேர்வு தொடர்பான அவரது கவலையை காட்டுகிறது. 


Also Read | சேலத்தில் நீட் தேர்விற்கு தயாரான மாணவன் தற்கொலை!


மருத்துவராகும் கனவோடு நீட் தேர்வுக்கு தயாரான மாணவி, தேர்வு எழுதிய பிறகு ஏற்பட்ட அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாணவர்களின் மன அழுத்தத்தை வெளிப்படுத்துவதாக இருக்கிறது.  


தமிழகத்தில் இந்த ஆண்டு 40 ஆயிரத்து 376 மாணவர்கள், 70 ஆயிரத்து 594 மாணவிகள், ஒரு திருநங்கை என மொத்தம் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 971 பேர் நீட் நுழைவுத்தேர்வு எழுதினார்கள். இந்த நிலையில், ‘நீட்’ தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நீட் தேர்வு எழுதிய பிறகு ஒரு மாணவி தற்கொலை செய்துக் கொண்டது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  


அண்மையில் நீட் தேர்வு எழுத அஞ்சி, மாணவன் தனுஷ் தற்கொலை செய்துக் கொண்டார். தற்போது மாணவி கனிமொழியுடன் சேர்த்து நீட் தேர்வின் காரணமாக தற்கொலை செய்துக்கொண்டவர்களின் எண்ணிக்கை 15ஆக அதிகரித்துவிட்டது.


Read Also | NEET மசோதா ஒருமனதாக நிறைவேறியது


என்று தணியுமோ இந்த நுழைவுத் தேர்வின் அழுத்தம் என்ற முடிவிலி கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சிகளை தமிழக அரசு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரும் மசோதாவை தமிழக அரசு நேற்று சட்டமாக்கியது. இந்த நிலையில், அதுபோன்ற சட்டத்தின் தேவையை மாணவ-மாணவியர்களின் தற்கொலைகள் உறுதிபடுத்துகின்றன.


நேற்று தமிழக சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதாவுக்கு பாஜக நீங்கலாக அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. இதனால் மசோதா ஒருமனதாக நிறைவேறியது.


Also Read | நீட் மசோதா சட்டமாகுமா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR