சேலத்தில் நீட் தேர்விற்கு தயாரான மாணவன் தற்கொலை!

MBBS., BDS., போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான ‘நீட்’ தேர்வை நாடு முழுவதும் 16 லட்சத்து 14 ஆயிரத்து 714 பேர் கொரோனா நோய்த்தொற்றுக்கு இடையில் இன்று சந்திக்கின்றனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 12, 2021, 12:50 PM IST
சேலத்தில் நீட் தேர்விற்கு தயாரான மாணவன் தற்கொலை! title=

சேலம்: MBBS., BDS., போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான ‘நீட்’ தேர்வை நாடு முழுவதும் 16 லட்சத்து 14 ஆயிரத்து 714 பேர் கொரோனா நோய்த்தொற்றுக்கு இடையில் இன்று சந்திக்கின்றனர்.

 தமிழகத்தை பொறுத்தவரையில், 40 ஆயிரத்து 376 மாணவர்கள், 70 ஆயிரத்து 594 மாணவிகள், ஒரு திருநங்கை என மொத்தம் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 971 பேர் தேர்வு எழுத உள்ளனர்.  பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்த ‘நீட்’ தேர்வு மாலை 5 மணியுடன் நிறைவுபெறுகிறது.  இந்த நிலையில், ‘நீட்’ தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கூழையூர் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி சிவக்குமார் என்பவரின் மகன் தனுஷ் (20). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாசிலாபாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து முடித்த இவர், மருத்துவர் கனவோடு நீட் தேர்வுக்கு தயார் ஆகி வந்துள்ளார்.  ஏற்கனவே 2 முறை நீட் தேர்வு எழுதியும் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான மதிப்பெண் கிடைக்காத காரணத்தால், இன்று 3-வது முறையாக தனுஷ் நீட் தேர்வு எழுத இருந்தார். இதற்காக அவர் தீவிரமாக தயாராகி வந்துள்ளார்.

neet

இரவு 1 மணிவரை தந்தையுடன் பேசிக்கொண்டிருந்த தனுஷ், அதன் பின் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நீட் தேர்வின் அச்சத்தின் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.  இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இன்று நீட் தேர்வு நடைபெறும் நிலையில், தேர்வு குறித்த அச்சத்தால், தனுஷ் தற்கொலை செய்து கொண்டாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மருத்துவராகும் கனவோடு நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர், இன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கூழையூர் கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News