மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் ஜே.இ.இ-மெயின் தேர்வுகள் ஆண்டுக்கு நான்கு முறை, அதாவது பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். முதற்கட்ட தேர்வு பிப்ரவரி 23-26 வரை CBT முறையில் நடைபெறும். NEET தேர்வைப் போல் தமிழ், மலையாளம் உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெறும். மாணவ-மாணவிகள் தங்கள் விருப்ப மொழியை தேர்வு செய்து எழுதலாம். நடப்பு கல்வியாண்டுக்கான JEE Main தேர்வு நான்கு மாதங்களில் நடைபெறும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நான்கு திருப்பங்களில் எப்போது வேண்டுமானாலும் மாணவர்கள் தங்கள் விருப்பப்படி தேர்வை  எழுத முடியும். தேர்வு மாதத்தை தங்கள் விருப்பப்படி தேர்வு செய்ய முடியும். ஒரு மாணவர் நான்கு முறையும் தேர்வை எழுதினால் என்றால், அந்த நான்கு தேர்வில் எதில் அவர் சிறந்த மதிப்பெண்ணை பெற்றுள்ளரோ, அதைக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்று போக்ரியால் (Ramesh Pokhriyal) தெரிவித்துள்ளார்.


 



ALSO READ | அடுத்த கல்வி ஆண்டில் JEE தேர்வு 4 முறை நடத்தப்படும்: ரமேஷ் போக்ரியால்!


முன்னதாக, ஜே.இ.இ-மெயின்ஸ் 2021 ஐ நடத்துவதற்கு பெறப்பட்ட பரிந்துரைகளை ஆராய்ந்ததாகவும், அதன்படி அட்டவணை அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார். "ஜேஇஇ முதன்மை தேர்வுகள் (JEE-Mains 2021) தொடர்பான உங்கள் ஆக்கபூர்வமான பரிந்துரைகளைப் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி. உங்கள் பரிந்துரைகளை நாங்கள் ஆராய்ந்தோம். இன்று மாலை 6 மணிக்கு எத்தனை முறை தேர்வு நடைபெறும் எப்பொழுது நடைபெறும் என்பதை நான் அறிவிப்பேன்". என்று நிஷாங்க் ட்வீட் செய்திருந்தார்.


கடந்த வாரம் மாணவர்களுடனான ஒரு ஆன்லைன் உரையாடலில், கூட்டு நுழைவுத் தேர்வை (ஜே.இ.இ) ஆண்டுக்கு மூன்று அல்லது நான்கு முறை நடத்துவதற்கான சாத்தியத்தை அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும், விடைத்தாளில் கேட்கக்கூடிய கேள்விகளின் எண்ணிக்கையைக் குறைப்பது குறித்து மதிப்பீடு செய்யப்படுவதாகவும் அமைச்சர் அறிவித்திருந்தார். 


NEET தேர்வுக்கான பாடத்திட்டங்கள் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த ரமேஷ் பொக்ரியால், ‘மத்திய சுகாதார அமைச்சகத்துடனும், தேசிய மருத்துவ ஆணையத்துடனும் கலந்து பேசி இறுதி முடிவு எடுக்கப்படும்’ என்று பதில் அளித்தார். இதைப்போல ‘10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியே முடிவு செய்யப்படும்’ என்றும் கூறினார்.


ALSO READ | NEET 2021 ரத்து செய்யப்படுமா? மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அளித்த பதில் என்ன


மேலும் ‘செய்முறை தேர்வுகளை எதிர்கொள்ள முடியாத மாணவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும்’ என்றும் உறுதி அளித்தார். CBSE 12 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் நீக்கப்பட்ட பகுதிகள் குறித்து பள்ளிகளுக்கு சந்தேகம் இருந்தால் இணையதளத்தில் பார்க்கலாம் என்றும் அவர் கூறினார்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR