நாடு முழுவதும் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு ஜேஇஇ மெயின் தேர்வு மற்றும் அட்வான்ஸ்டு தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொறியியல் நுழைவுத்தேர்வான ஜேஇஇ  (JEE Main) மெயின் 2021 தேர்வு ஆண்டுக்கு 4 முறை நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக பிப்ரவரி மாதமும் அதைத் தொடர்ந்து மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களிலும் ஜேஇஇ மெயின் 2021 தேர்வு நடைபெறும். ஒரே மாணவர் 4 முறையும் தேர்வை எழுதலாம். எனினும் அவற்றில் பெற்றுள்ள அதிகபட்ச மதிப்பெண்களே கணக்கில் கொள்ளப்படும்.


ALSO READ |  நர்சிங் படிப்பிற்கும் NEET தேர்வா.. தேசிய தேர்வு முகமை கூறுவது என்ன?


இதற்கிடையே இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாகக் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ஜேஇஇ மெயின் தேர்வு நடத்தப்பட்ட நிலையில், ஏப்ரல், மே மாதங்களில் நடக்க இருந்த தேர்வு, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஜேஇஇ 3-ம் கட்ட நுழைவுத்தேர்வு ஜூலை 20 முதல் 25 வரை கொரோனா தொற்று வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்பட்டு அதற்கான முடிவுகள் வெளியானது. தற்போது சமீபத்தில் நடைப்பெற்ற 4-ம் கட்ட நுழைவுத்தேர்வு நடைபெற்றது.


இந்நிலையில், தற்போது ஜேஇஇ மெயின் 4-ம் கட்ட நுழைவுத்தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை (National Testing Agency) வெளியிட்டுள்ளது. இதன்படி, தேர்வு எழுதியவர்களில் 44 பேர் 100 சதவீதம் மதிப்பெண்களை பெற்றுள்ளனர். மேலும் 18 பேர் முதல் இடம் பிடித்துள்ளனர். அவர்களில் ஆந்திர பிரதேசத்தில் இருந்து 4 பேர், ராஜஸ்தானில் இருந்து 3 பேர், தெலுங்கானா மற்றும் உத்தர பிரதேசத்தில் இருந்து தலா 2 பேர் என மொத்தம் 18 பேர் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.


JEE மெயின் செஷன் 4 முடிவு 2021 ஐ jeemain.nta.nic.in இல் எப்படி பார்ப்பது


1. jeemain.nta.nic.in இல் JEE இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்


2. முகப்புப்பக்கத்தில் 'Session 4 result' இணைப்பைக் கிளிக் செய்யவும்.


3. புதிய பக்கத்திற்கு கொண்டு செல்லும் அதில் உங்கள் தேர்வு அமர்வு, விண்ணப்ப எண், பிறந்த தேதி மற்றும் பாதுகாப்பு எண் (கேஸ் சென்சிடிவ்) ஆகியவற்றை உள்ளிட வேண்டும்:


4. After filling in your details, click on the 'submit' option.


5. JEE Main Session 4 Result 2021 காட்டப்படும்.


ALSO READ |  Engineering படிக்க இனி 12 ஆம் வகுப்பில் Maths, Physics கட்டாயமில்லை: AICTE அதிரடி அறிவிப்பு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR