நர்சிங் படிப்பிற்கும் NEET தேர்வா.. தேசிய தேர்வு முகமை கூறுவது என்ன..!!!

பல் (Dental) மற்றும் மருத்துவப் படிப்புகளுக்கு அகில இந்திய அளவில் நீட் தகுதித் தேர்வு கடந்த 5 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 14, 2021, 12:15 AM IST
  • பல் (Dental) மற்றும் மருத்துவப் படிப்புகளுக்கு அகில இந்திய அளவில் நீட் தகுதித் தேர்வு கடந்த 5 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.
  • 2021-22ஆம் ஆண்டுக்கான நீட் தகுதித் தேர்வு குறித்து தேசிய தேர்வு முகமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
நர்சிங் படிப்பிற்கும் NEET தேர்வா.. தேசிய தேர்வு முகமை கூறுவது என்ன..!!! title=

மருத்துவ படிப்பிற்கான நீட் தகுதித் தேர்வு ( NEET EXAM) இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 11 மொழிகளில் ஆகஸ்ட் 1-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், நர்சிங் படிப்புகள் (Nursing Courses), பிஎஸ்சி லைஃப் சயின்ஸ் (BSc Life Science) உள்ளிட்ட படிப்புகளுக்கு நீட் தகுதி தேர்வு மதிப்பெண்களைப் பயன்படுத்தி மாணவர் சேர்க்கை நடத்தலாம் என்று தேசியத் தேர்வு முகமை அறிவித்துள்ளது. 

பல் (Dental) மற்றும் மருத்துவப் படிப்புகளுக்கு அகில இந்திய அளவில் நீட் (NEET) தகுதித் தேர்வு கடந்த 5 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. 

கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடியிலும் நீட் தேர்வு, மாணவர்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடத்திப்பட்டது. இந்நிலையில் 2021-22ஆம் ஆண்டுக்கான நீட் தகுதித் தேர்வு குறித்து தேசிய தேர்வு முகமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், "2021-22ஆம் ஆண்டுக்கு எம்பிபிஎஸ் (MBBS), பிடிஎஸ் (BDS), பிஏஎம்எஸ்(BAMS), பிஎஸ்எம்எஸ் (BSMS), பியுஎம்எஸ் (BUMS), பிஹெச்எம்எஸ் (BHMS) ஆகிய படிப்புகளுக்கு ஏற்கெனவே கடைபிடிக்கப்படும் விதிமுறைகளைப் பின்பற்றி தேசிய தேர்வு முகமை நீட் நுழைத்தேர்வு நடத்த உள்ளது.

மத்திய, மாநில அரசுகளின் கல்வி நிறுவனங்கள்  நீட் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில், நர்சிங் பள்ளிகள், (Nursing Courses), பிஎஸ்சி லைஃப் சயின்ஸ் (BSc Life Science) ஆகிய படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கைக்கு விதிமுறைகளின்படி பயன்படுத்திக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.ஆனால், இதன் பொருள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதாகும். அது கட்டாயமில்லை.  நர்சிங் கல்லூரிகள் மற்றும் பிஎஸ்சி படிப்புகளின் சேர்க்கைக்கு, கல்வி நிறுவனங்கள் விரும்பினால், அதன் அடிப்படையில் சேர்த்துக் கொள்ளலாம்.

நீட் தொடர்பான பாடங்கள், பாடப்பிரிவுகள், தகுதி, வயது, ஒதுக்கீடு, தேர்வுக் கட்டணம், தேர்வு மையங்கள் ஆகியவை தொடர்பான தகவல்கள் விரைவில் htttps://ntaneet.nic.in  என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். நீட் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் இதன் மூலம் விபரங்களை பெறலாம் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ | விமானத்தில் மாஸ்க் சரியாக அணியாத பயணிகள் இறக்கிவிடப்படலாம்: DGCA

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News