JEE Mains 2020 சமீபத்திய செய்தி: கடுமையான COVID வழிகாட்டுதல்களுக்கு (COVID Guidelines) மத்தியில் சமீபத்தில் JEE Mains 2020 தேர்வுகளை அளித்த மாணவர்களுக்கு ஒரு நல்ல செய்தியை மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் (Ramesh Pokhriyal) புதன்கிழமையன்று வழங்கினார். JEE Mains 2020 தேர்வுகளுக்கான முடிவுகளை அறிவிப்பதற்கான செயல்முறை தொடங்கிவிட்டது என்றும் அது விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ட்விட்டரில் இது பற்றி கூறிய போக்ரியால், முடிவு அறிவிப்புக்கான செயல்முறை தொடங்கியுள்ளதாகவும், விரைவில் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.


"அரசாங்கத்தின் மீது நம்பிக்கையை வெளிப்படுத்தியதற்கும், JEE Mains 2020 தேர்வில் பங்கேற்றதற்கும் அனைத்து மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. முடிவு அறிவிப்புக்கான செயல்முறை தொடங்கப்பட்டுள்ளது, விரைவில் முடிவுகள் அறிவிக்கப்படும்” என்றார் அவர்.



முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடனேயே, வேட்பாளர்கள் தங்கள் மதிப்பெண்களை ஆன்லைனில் jeemain.nta.nic.in இல் பார்க்கலாம்.


JEE Mains 2020 தேர்வை 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதியுள்ளனர். JEE Mains 2020 முடிவு செப்டம்பர் 11 ஆம் தேதி வெளிவரும் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.


பல ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் மாணவர்களின் பெரும் போராட்டம் மற்றும் சலசலப்புக்கு மத்தியில், தேசிய தேர்வு முகமையான NTA  செப்டம்பர் 1 முதல் 6 வரை JEE Mains 2020 தேர்வுகளை நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் கடுமையான கோவிட் வழிகாட்டுதல்களுடன் நடத்தியது.


கொரோனா வைரஸின் இந்த நேரத்தில் நுழைவுத் தேர்வை பாதுகாப்பாக நடத்திய NTA மற்றும் அதிகாரிகளுக்கு கல்வி அமைச்சர் நன்றி தெரிவித்தார்.


ALSO READ: JEE Advanced 2020: தேர்வுத் தேதியில் மாற்றம், முழு விவரம் உள்ளே!!


"இந்த தேர்வுகளை வெற்றிகரமாக ஆக்குவதற்கு அவர்கள் அளித்த பெரும் ஆதரவுக்கு அனைத்து மாநில அரசுகள் மற்றும் அவர்களின் அதிகாரிகள், நகர ஒருங்கிணைப்பாளர்கள், இன்விஜிலேட்டர்கள் மற்றும் தேர்வு செயற்பாட்டாளர்களின் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் எனது மனமார்ந்த நன்றி" என்று அவர் கூறினார்.


செவ்வாயன்று, NTA தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் JEE Mains 2020 ஆன்சர் கீயையும் (Answer Key) வெளியிட்டுள்ளது.


JEE Mains 2020: இவ்வகையில் தேர்வு முடிவுகளை சரிபார்க்க்லாம்:


1) மாணவர்கள் jeemain.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும்


2) மாணவர்கள் முகப்புப்பக்கத்தில் உள்ள “JEE Mains 2020 Results” என்ற இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும்


3) Home Page-ல் ஒரு புதிய பக்கம் தோன்றும்


4) பின்னர், மாணவர்கள் தேவையான சான்றுகளை அளித்து உள்நுழைய வேண்டும்


5) JEE Mains 2020 முடிவுகள் முகப்புத் திரையில் தோன்றும்


6) எதிர்கால குறிப்புக்காக, மாணவர்கள் முடிவுகளை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக்கொள்ளலாம். 


ALSO READ: NEET 2020: ஒரு அறையில் 12 பேர் மட்டுமே அனுமதி, இது போன்ற அம்சங்கள் தேர்வில் காணப்படும்!