புதுடெல்லி: இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய இறுதிநாள் இன்று. neet.nta.nic.in இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த ஆண்டிற்கான நீட் நுழைவுத் தேர்வு ஜூலை 17-ம் தேதி நடைபெற உள்ளது. ஏப்ரல் 6ம் தேதி முதல் விண்ணப்ப நடைமுறை தொடங்கீயட் நிலையில் இன்றே இறுதி நாளாகும்.


இந்த ஆண்டு தேர்வு எழுத சுமார் 20 லட்சம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து உள்ளனர். இறுதி நாளான இன்று விண்ணப்பிக்கும் மாணவர்கள் உட்பட தோராயமாக இந்த ஆண்டு 21 லட்சம் மாணாக்கர்கள் நீட் தேர்வு எழுதலாம் என்று நம்பப்படுகிறது.


இந்தியா முழுவதும் உள்ள மாணாக்கர்கள், இந்த ஆண்டு மருத்துவ இளங்கலை பட்டப்படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வில் பங்கேற்க, இன்று இரவு 11.50 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


மேலும் படிக்க | NEET PG 2022 ஒத்திவைப்பு தொடர்பான மனு: உச்ச நீதிமன்ற விசாரணை


2022 நீட் நுழைவுத் தேர்வில் விண்ணப்பதாரர்களின் வயது உச்ச வரம்பில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கான உச்ச வயது வரம்பை அரசு நீக்கியது.


கடந்த ஆண்டு வரை, நீட் தேர்வில் கலந்துகொள்வதற்கான அதிகபட்ச வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 25 எனவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 30ஆகவும் இருந்தது. தற்போது வயது வரம்பு நீக்கப்பட்டுள்ளதால், மருத்துவ நுழைவு தேர்வில் போட்டி அதிகரிக்க வாய்ப்புகள் மேலும் அதிகரித்துள்ளது. 



அதேபோல, தேர்வுமுறையில், சாய்ஸ் வழங்கப்பட்டுள்ளது. வழக்கமாக, ஒவ்வொரு பிரிவிலும் 45 கேள்விகள் இருக்கும். அதற்கு பதிலாக இந்த ஆண்டு தேர்வில், விலங்கியல், தாவரவியல், வேதியியல், இயற்பியல் பாடங்களில் இருந்து 50 கேள்விகள் கேட்கப்படும். அதில் 45 கேள்விகளுக்கு பதிலளித்தால் போதும். 


அதேபோல, தேர்வுக்கான நேரம் 20 நிமிடங்கள் கூடுதலக்கப்பட்டுள்ளது. கேள்விகளின் எண்ணிக்கை 180 என்ற பழைய அளவிலேயே இருந்தாலும். இந்த முறை கூடுதலாக 20 நிமிடங்கள் வழங்கப்பட்டு, 3 மணி நேரம் 20 நிமிடங்களில் தேர்வர்கள் தங்கள் பதிலை எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


ஆங்கிலம் தவிர, தமிழ், இந்தி, மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், தெலுங்கு மற்றும் உருது என பிராந்திய மொழிகளிலும் தேர்வர்கால் பதிலளிக்கலாம்.


நீட் தேர்வு 543 நகரங்களில் உள்ள தேர்வு மையங்களில் நடைபெறும். இதுவே, கடந்தாண்டு, 202 நகரங்களில் மட்டுமே நடத்தப்பட்டது என்பதும், இந்தியாவிற்கு வெளியே 14 தேர்வு மையங்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளதும் இந்த ஆண்டு நீட் நுழைவுத்தேர்வில் குறிப்பிடத்தக்க மாறுதல்களாகும். 


மேலும் படிக்க | நீட் விவகாரத்தில்  தமிழக அரசு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR