LIC Recruitment 2023: மிஸ் பண்ணாதிங்க... LIC-ல் மாதம் ரூ. 50 ஆயிரம் சம்பளத்தில் வேலை!
LIC Recruitment 2023: எல்ஐசியில் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் காலியாக உள்ள 9 ஆயிரத்திற்கு மேற்பட்ட பணியிடங்களுக்கான விண்ணப்பம் வெளியிடப்பட்டுள்ளது.
9 ஆயிரத்து 394 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், அதற்கான விண்ணப்பத்தையும் எல்ஐசி வெளியிட்டுள்ளது. எல்ஐசி ஏடிஓ (Apprentice Development Officers) பதவிக்கு 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் நிரப்பப்படும்.
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் licindia.in என்ற எல்ஐசியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க கடைசி நாள் பிப்ரவரி 10 என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளம் 51 ஆயிரத்து 500 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் 1 வருட தகுதிகாண் காலத்தில் (Probation Period) இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய நாட்கள்
விண்ணப்பத்தின் தொடக்க தேதி: ஜனவரி 21, 2023
விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 10, 2023
அழைப்புக் கடிதத்தைப் பதிவிறக்கம் செய்யும் தேதி: மார்ச் 4, 2023
முதல்நிலைத் தேர்வு நடைபெறும் தேதி: மார்ச் 12, 2023
முதன்மைத் தேர்வு தேதி: ஏப்ரல் 8, 2023
காலியிட விவரங்கள்
தெற்கு மண்டல அலுவலகம்: 1516 பணியிடங்கள்
தென் மத்திய மண்டல அலுவலகம்: 1408 பணியிடங்கள்
வடக்கு மண்டல அலுவலகம்: 1216 பணியிடங்கள்
வட மத்திய மண்டல அலுவலகம்: 1033 பணியிடங்கள்
கிழக்கு மண்டல அலுவலகம்: 1049 பணியிடங்கள்
கிழக்கு மத்திய மண்டல அலுவலகம்: 669 பணியிடங்கள்
மத்திய மண்டல அலுவலகம்: 561 பணியிடங்கள்
மேற்கு மண்டல அலுவலகம்: 1942 பதவிகள்
மேலும் படிக்க | 299 ரூபாயில் அஞ்சலகம் வழங்கும் அசத்தல் காப்பீடு; ரூ.10 லட்சம் வரையிலான பலன்கள்!
தகுதி வரம்பு
விண்ணப்பதாரர்கள் தங்கள் கல்வித் தகுதிகளை https://licindia.in/Bottom-Links/Careers/Recruitment-of-Apprentice-Development-Officer-22-2 என்ற இணையதளத்திற்குச் சென்று சரிபார்க்கலாம். விண்ணப்பதாரரின் வயது வரம்பு 21 வயது முதல் 30 வயது வரை இருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை
ஆன்லைன் தேர்வுகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும். அதைத் தொடர்ந்து ஆன்லைன் தேர்வில் தகுதிபெறும் விண்ணப்பதாரர்களின் நேர்காணல் நடத்தப்படும். அதைத் தொடர்ந்து ஆட்சேர்ப்புக்கு முந்தைய மருத்துவத் தேர்வு மேற்கொள்ளப்படும்.
விண்ணப்பக் கட்டணம்
விண்ணப்பக் கட்டணம் பட்டியலின விண்ணப்பத்தாரர்களை தவிர மற்றவர்களுக்கு 750 ரூபாயும், பட்டியலின விண்ணப்பதாரர்களுக்கு 100 ரூபாயும் வழங்கப்படுகிறது. டெபிட் கார்டுகள் (RuPay/Visa/MasterCard/Maestro), கிரெடிட் கார்டுகள், UPI, இன்டர்நெட் பேங்கிங், IMPS மற்றும் கேஷ் கார்டுகள்/மொபைல் வாலட்களைப் பயன்படுத்தி பணம் செலுத்தலாம்.
தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் எல்ஐசியால் தீர்மானிக்கப்பட்ட காலத்திற்கு, கோட்பாடு மற்றும் கள விற்பனைப் பயிற்சியைப் பெற வேண்டும். பயிற்சியின் காலம், பயிற்சி தொடங்கிய நாளில் இருந்து தொடங்கும். விண்ணப்பதாரர்கள் 2 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படக்கூடிய 1 வருட தகுதிகாண் காலத்தில் இருப்பார்கள்.
மேலும் படிக்க | அரசின் அதிரடி அறிவிப்பு! இந்த வகை வாகனங்களின் உரிமம் ஏப்ரல் 1 முதல் ரத்து!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ