NEET vs Counseling: நீட் எழுதிய மாணவர்களுக்கு தொலைபேசி மூலம் கவுன்சிலிங்
![NEET vs Counseling: நீட் எழுதிய மாணவர்களுக்கு தொலைபேசி மூலம் கவுன்சிலிங் NEET vs Counseling: நீட் எழுதிய மாணவர்களுக்கு தொலைபேசி மூலம் கவுன்சிலிங்](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2021/09/14/197944-neet-cm-centre.jpg?itok=n1WLHhxW)
நீட் எழுதிய மாணவர்களுக்கு தொலைபேசி மூலம் கவுன்சிலிங் கொடுக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதனை மாநில அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வின் தாக்கத்தினால் மாணவர்களின் பலி எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலை ஏற்படுத்திவருகிறது. மாணவர்களின் மன உறுதியை குலைக்கும் செய்திகளுக்கு மத்தியில் தமிழக அரசு சார்பில் ஒரு ஆறுதல் அறிவிப்பு வந்து இதமளிக்கிறது.
நீட் எழுதிய மாணவர்களுக்கு தொலைபேசி மூலம் கவுன்சிலிங் கொடுக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக மாநில அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு எழுதுவதற்கு முன்னதாக அச்சத்தில் மாணவர் தனுஷ் தற்கொலை செய்துக் கொண்ட நிலையில், நுழைவுத் தேர்வு எழுதிய பிறகு இன்று மாணவி கனிமொழி தற்கொலை செய்துக் கொண்டிருக்கிறார்.
இவர்களைப் போலவே பல மாணவர்களுக்கும் மன அழுத்தம் ஏற்படும் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்த மாநில அரசு, தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மன நல ஆலோசனை கொடுக்கலாம் என்றும் முடிவு செய்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
Also Read | முதலமைச்சராக நீட்டை எதிர்த்த மோடி, இப்போது மெளனமாக இருப்பது ஏன்?
ஞாயிற்றுக் கிழமையன்று நடைபெற்ற மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வை 1.10 லட்சம் தமிழக மாணவர்கள் எழுதியுள்ளனர். இன்று, நீட் தேர்வு தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாணவர்கள் மன உளைச்சல் கொள்ளக்கூடாது என்று அறிவுறுத்தினார்.
மாணவர்களின் மருத்துவ கனவை நிறைவேற்றுவதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து கொண்டிருக்கிறார். தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தபடி, சட்டப்பேரவையில் நேற்று நீட் தேர்வுக்கு எதிரான சட்ட மசோதாவை தாக்கல் செய்து ஆளுநருக்கு அனுப்பிவிட்டோம் என்று அமைச்சர் தெரிவித்தார்.
அதுமட்டுமல்ல, நீட் தேர்வு முடிவுகளுக்குப் பின்னர், தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மன நல ஆலோசனை கொடுக்கவும் தமிழக அரசு முடிவெடுத்திருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Also Read | NEET மசோதா நீட்டாக ஒருமனதாக நிறைவேறியது
தமிழ்நாட்டில் இரு நாட்கள் இடைவெளியில் நீட் தேர்வு அச்சத்தில் இரு மாணவர்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். தேர்வில் வினாக்கள் மிகவும் கடினமாக இருந்ததாக பெற்றோரிடம் சொல்லில் வருத்தப்பட்டிருந்த கனிமொழி நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்தால் விரும்பிய படிப்பை படிக்க முடியாது என்ற அச்சத்தில் தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்கக் கோரும் புதிய சட்ட முன்வரைவு சட்டப்பேரவையில் நேற்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டட்து அது தற்போது ஆளுநருக்கு அனுப்பப்பட்டுவிட்டது.
அடுத்த கல்வியாண்டில் நீட் தேர்வு நடத்தப்படுவதற்கு இன்னும் 8 மாதங்கள் மட்டுமே இருப்பதால், நீட் விலக்கு பெறும் புதிய சட்டத்திற்கான ஒப்புதலை குடியரசுத் தலைவரிடம் இருந்து பெறும் முயற்சியில் தமிழ்க அரசு மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
தமிழகத்தில் நீட் தேர்வு இனி இல்லை என்ற அறிவிப்பு, நீட் தேர்வினால் பலியான மாணாக்கர்களுக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.
Also Read | நீட் பயத்தால் மற்றுமொரு தற்கொலையா? உண்மை என்ன?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR