NEET: முதலமைச்சராக நீட்டை எதிர்த்த மோடி, இப்போது மெளனமாக இருப்பது ஏன்?

2012 ஆம் ஆண்டு நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது குஜராத் அரசு. அப்போது குஜராத் முதலமைச்சராக இருந்தார் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 14, 2021, 12:12 PM IST
  • முதலமைச்சராக நீட்டை எதிர்த்தார் மோடி
  • பிரதமரானது மெளனம் காப்பது ஏன்?
  • காலம் செய்த கோலமா? கடமை செய்யும் மாயமா?
NEET: முதலமைச்சராக நீட்டை எதிர்த்த மோடி, இப்போது மெளனமாக இருப்பது ஏன்?

நீட் நுழைவுத் தேர்வு என்பது மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக மாறியிருக்கிறது. 

தற்போது தமிழகம் மட்டுமே நீட் தேர்வுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியிருக்கிறது, நீட்டில் இருந்து மாநிலத்திற்கு விலக்கு வேண்டும் என்று சட்டமும் இயற்றியிருக்கிறது. ஆனால், 2012 ஆம் ஆண்டு நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது குஜராத் அரசு. அப்போது குஜராத் முதலமைச்சராக இருந்தார் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி.

அப்போது நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் சிலர் இணைந்து பொதுநலன் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அப்போது நீதிமன்றத்தில் நீட்டை முதலமைச்சர் நரேந்திர மோதி தலைமையிலான அரசு ஆதரிக்கவில்லை.

ஆனால் தற்போது அவர் பிரதமரான பிறகு, நீட் தேர்வு தேவையில்லை என்ற கோரிக்கையை புறக்கணித்துக் கொண்டே வருகிறார். 

Also Read | NEET மசோதா நீட்டாக ஒருமனதாக நிறைவேறியது

மாநிலத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் போது எதிர்க்கும் ஒரு விஷயத்தை, மத்திய அரசின் பிரதமராக பொறுப்பேற்ற பிறகு ஆதரிப்பது என்பது காலத்தின் கோலமா? இல்லை பார்க்கும் கோணம் மாறுபட்டுவிட்டதா? 

நீட் தேர்வு (National Eligibility cum Entrance Test) என்பது பொது மருத்துவம், பல் மருத்துவம் துறையில் சேர்வதற்கு இந்திய அளவில் நடைபெறும் நுழைவுத்தேர்வு. 2013ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2019-ஆம் ஆண்டு முதல் இந்த நுழைவுத்தேர்வை தேசியத் தேர்வு முகமை நடத்துகிறது.

அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்விற்கு (All India Pre Medical Test (AIPMT)) மாற்றாக, நீட் தேர்வு (NEET) அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நுழைவுத் தேர்வானது அனைத்து அரசு மற்றும்  தனியார் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கு பொருந்தும். 

தமிழ், உள்ளிட்ட 8 மொழிகளில் தேர்வு நடத்தப்படும் என்று சொல்லப்பட்டாலும், அது மாநில பாடத் திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்துவதாக உள்ளது.

Read Also | நீட் மசோதா தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது; மசோதா சட்டமாகுமா?

2017 ஆம் ஆண்டில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனிதா எனும் மாணவி தற்கொலை செய்துகொண்டார். மாணவியின் தற்கொலை, நீட் நுழைவுத்தேர்வுக்கான போராட்டத்தை தமிழகத்தில் தூண்டியது. 

நீட்டினால் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்திற்கு சான்றளிக்கும் மற்றுமொரு தற்கொலை 2018ம் ஆண்டில் நிகழ்ந்தேறியது. அப்போது மாநில அரசின் கல்வி வாரியத்தின் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 93.75 சதவிகித  மதிப்பெண் பெற்ற பிரதீபா தற்கொலை செய்து கொண்டார்.

கூலித்தொழிலாளியின் மகளான பிரதிபாவின் தற்கொலையுடன் நீட்டின் பலி எண்ணிக்கை முற்றுப் பெறவில்லை. இன்று நீட் தேர்வை எழுதிவிட்டு வந்து சோகத்தில் இருந்த மாணவி கனிமொழி தற்கொலையும் நீட்டை எதிர்ப்பவர்களின் கோரிக்கைக்கு வலு சேர்க்கிறது.

Also Read | நீட் பயத்தால் மற்றுமொரு தற்கொலையா? உண்மை என்ன?

2020-ஆம் ஆண்டில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு தமிழக அரசு 7.5% இட ஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றியது. இதனால் 400-க்கும் அதிகமான அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர வாய்ப்புக் கிடைத்தது.

நடப்பு ஆண்டு (2021) முதல் அகில இந்திய இடஒதுக்கீட்டில் தேர்வாகும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (Other Backward Class (OBC)) 27% இட ஒதுக்கீடும்; பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு (Economically Weaker Sections (EWSs)) 10% இட ஒதுக்கீடும் வழங்கி மத்திய அரசு ஆணை வெளியிட்டது.

தமிழக சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா அறிமுகம் செய்யப்பட்டபோது, பாஜகவைத் தவிர அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. தற்போது மசோதா ஆளுநரின் பரிசீலனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

Also Read | நீட் மசோதா சட்டமாகுமா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News