நாளை NEET தேர்வு.... விதிமுறைகளின் முழுமையான விபரம் இதோ..!!!
செப்.13, ஞாயிற்றுக் கிழமை நடத்தப்படும் மருத்துவ நுழைவுத் தேர்வு நீட் தேர்வில் (NEET) 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொள்வார்கள்.
புதுடெல்லி: கோவிட் 19 தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு கடுமையான முன்னெச்சரிக்கைகளுடன், . செப்.13 ஞாயிற்றுக் கிழமை நடத்தப்படும் மருத்துவ நுழைவுத் தேர்வு நீட் தேர்வில் (NEET) 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொள்வார்கள்.
சமூக இடைவெளியை பராமரிக்கும் வகையில், பையங்களின் எண்ணிக்கை 2,546 இலிருந்து 3,843 ஆக உயர்த்தப்பட்டுள்ளது, அதே நேரத்தில் ஒரு அறையில் எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை முந்தைய 24 என்ற எண்ணிக்கையிலிருந்து 12 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த மே 3ம் மாதம் நடப்பதாக இருந்த நீட் தேர்வு கொரோனா பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு, நாளை நடைபெறுகிறது. மொத்தம் 15.97 லட்சம் பேர் தேர்வுக்கு பதிவு செய்துள்ளனர்.
பரீட்சை மையத்தின் நுழைவாயிலிலும், தேர்வு மண்டபத்தின் உள்ளேயும் சானிடசர்கள் வைக்கப்படும். பார்கோடு முறை மூலம் மாணவர்களின் ஹால் டிக்கெட் சரிபார்க்கப்படும்.
மாணவர்கள் உள்ளே நுழையும் போது தெர்மல் ஸ்க்ரீனிங் செய்யப்படும். உடல் வெப்ப நிலை அதிகம் இருந்தால், 20 நிமிடம் வரை தனியாக அமரவைக்கப்படுவார்கள். அப்படியும் உடல் வெப்பநிலை குறையவில்லை என்றால். தனியாக ஒரு அறையில் தேர்வு எழுத அனுமதி வழங்கப்படும்.
மேலும் படிக்க | நீட் தற்கொலை!! "படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லை" -இயக்குனர் சேரன் நம்பிக்கை
தேர்வு எடுத்து செல்ல வேண்டிய, தவிர்க்க வேண்டிய பொருட்கள்:
ஹால் டிக்கெட், அடையாள அட்டை, பொது பணித்துறை சான்றிதழ் அவசியம்
பால் பாயிண்ட் மட்டுமே அனுமதிக்கப்படும்.
செல்போன், ப்ளூடூத் போன்ற தொழில் நுட்ப சாதனம் எதுவும் அனுமதிக்கப்படாது.
தண்ணீர் பாட்டில் கொண்டு வரலாம். ஆனால், அந்த பாட்டில், ட்ரான்பேரண்டான பாட்டிலாக இருக்க வேண்டும். வண்ண பாட்டில் கூடாது.
மாஸ்க் அணிவது கட்டாயம்.
முழுக்கை சட்டை, பெரிய பட்டன் வைத்த சட்டைகள், அடர் நிறம் கோண்ட ஆடைகள் அணியக்கூடாது.
மாணவர்கள் வாட்ச், அதாவது கை கடிகாரம் அணிய அனுமதி இல்லை.
மாணவர்கள் ஷூ அணியக்கூடாது. செருப்பு தான் அணிய வேண்டும்.
அதிகரித்து வரும் COVID-19 தொற்று பாதிப்பிற்கு மத்தியில் தேர்வுகளை ஒத்திவைப்பதற்கான கோரிக்கை முன்னதாக வைக்கப்பட்டது. தேர்வை ஒத்திவைக்கக் கோரும் மனுவை உச்ச நீதிமன்றம் முன்னதாக தள்ளுபடி செய்தது, மாணவர்களின் "விலைமதிப்பற்ற ஆண்டை" வீணடிக்க முடியாது, வாழ்க்கை தொடர வேண்டும் என்று கூறியது. காங்கிரஸின் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக், திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட பல எதிர்க்கட்சி தலைவர்களும் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.
மேலும் படிக்க | இன்றைய COVID-19 நிலவரம்: தமிழகத்தில் 5495 பேருக்கு தொற்று; 76 பேர் மரணம்