NEET 2021: இந்த ஆண்டு இரண்டு முறை நடக்குமா NEET தேர்வு? எதிர்பார்ப்பில் மாணவர்கள்
NEET 2021-ன் தேதிகள் தொடர்பான அறிவிப்பை டிசம்பர் மாத இறுதியில் அல்லது ஜனவரி மாத தொடக்கத்தில் தேசிய தேர்வு முகைமை (NTA) வெளியிடும் என்ற செய்திகள் புழக்கத்தில் உள்ளன.
JEE Main 2021 தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் வந்ததையடுத்து, தற்போது மாணவர்கள் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான NEET 2021 பற்றிய தகவல்களுக்காக காத்திருக்கின்றனர். JEE Main 2021 தேதிகள் அறிவிக்கப்பட்ட பின்னர், பல மாணவர்கள் ட்வீட் மூலம் NEET 2021 தேர்வு தேதிகள் பற்றிய அறிவிப்பையும் வெளியிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
NEET 2021-ன் தேதிகள் தொடர்பாக டிசம்பர் மாத இறுதியில் அல்லது ஜனவரி மாத தொடக்கத்தில் தேசிய தேர்வு முகைமை (NTA) அறிவிக்கும் என்ற செய்திகளும் புழக்கத்தில் உள்ளன.
இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் எதுவும் வரவில்லை. மிகுந்த எதிர்பார்ப்புக்குப் பிறகு, கல்வி அமைச்சர் JEE Main 2021 தேர்வுகளுக்கான தேதிகளை அறிவித்தார். முன்னதாக அவர் மாணவர்களுடனான தனது வெபினாரில் பரிந்துரைத்தபடி, JEE Main 2021 நான்கு முறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் NEET 2021 தேர்வும் ஒன்றுக்கு மேற்பட்ட முறைகள் நடக்கக்கூடுமோ என்ற எதிர்பார்ப்பு இப்போது வலுப்பெற்று வருகிறது.
கல்வி அமைச்சரை டேக் செய்து பல மாணவர்கள் NEET தேர்வை ஜூன் மாதம் வரை ஒத்திவைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். சிலர் தேர்வை ஒன்றுக்கு மேற்பட்ட முறை நடத்தக் கோரியுள்ளனர். சிலரோ ஆன்லைனில் NEET தேர்வு (NEET Exam) நடக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
ALSO READ: அடுத்த கல்வி ஆண்டில் JEE தேர்வு 4 முறை நடத்தப்படும்: ரமேஷ் போக்ரியால்!
தருண் குமார் என்ற மாணவர் கல்வி அமைச்சரை டேக் செய்து, “மதிப்புமிக்க ஐயாவுக்கு வணக்கங்கள். மாணவர்கள் முன்கூட்டியே தங்களை தயார் செய்து கொள்ள NEET 2021-க்கான தேதிகளை விரைவில் அறிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று ட்வீட் செய்துள்ளார்.
இன்னும் பல மாணவர்கள் தேர்வு தேதிகள் குறித்து தெளிவுபடுத்துமாறு கேட்டுள்ளனர்.
வழக்கமாக NEET தேர்வுகள் குறித்த அறிவிப்பு நவம்பர் அல்லது டிசம்பரில் வெளியிடப்படும். கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக, இந்த கல்வியாண்டின் பல தேர்வுகள் மற்றும் அறிவிபுகளைப் பொறுத்தவரை பல தாமதங்கள் ஏற்பட்டுள்ளன.
இதனால் நிச்சயமற்ற தன்மை அதிகரித்துள்ளது. JEE Main 2021 தேர்வுகள் ஒரு மாதம் மட்டுமே தாமதிக்கப்பட்டுள்ளன. NEET 2021 மற்றும் CBSE பொதுத் தேர்வுகளிலும் இந்த அளவிலான தாமதமே இருக்கும் என பலரும் எதிர்பார்க்கிறார்கள்.
ALSO READ: JEE Main 2021: தேர்வு தாமதிக்கப்படுமா? மாணவர்களுக்கான முக்கிய தகவல்கள்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR