NEP 2020 : புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்தும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடி( PM Narendra Modi), 21ம் நூற்றாண்டில் பள்ளிக் கல்வி என்ற தலைப்புல் நாடு முழுவதிலும் உள்ள ஆசியர்களிடன் வீடியோ கன்பரென்சிங் மூலம் உரையாடினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதிய தேசிய கல்வி கொள்கை (NEP 2020) என்பது புதிய தேவைகள், புதிய எதிர்பார்ப்புகள், புதிய இந்தியா ஆகியவற்றை பூர்த்தி செய்வதற்கான ஒரு வழிமுறையாகும் என்று பிரதமர் கூறினார். கடந்த 4-5 ஆண்டுகளின் கடின உழைப்பு இதற்குப் பின்னால் உள்ளது என்றார். மார்க் ஷீட் என்பது மாணவர்களுக்கு ஒரு 'பிரஷர் ஷீட்' மற்றும் குடும்பங்களுக்கு ஒரு 'பிரஸ்டீஜ் ஷீட்' எனவும் ஆகிவிட்டது என்றார். இந்த அழுத்தத்தை நீக்குவதே தேசிய கல்வி கொள்கையின் முக்கிய குறிக்கோள் என்றார்.


தேசிய கல்விக் கொள்கையின் முக்கிய நோக்கம், படிப்பினால் உருவாகும் மன அழுத்தத்திலிருந்து நம் குழந்தைகளை வெளியேற்றுவதாகும். பரீட்சை மாணவர்களுக்கு தேவையற்ற அழுத்தம் கொடுக்காத வகையில் இருக்க வேண்டும். ஒரே ஒரு தேர்வில் மாணவர்களை மதிப்பீடு செய்ய முயற்சிக்கக்கூடாது என்றார் பிரதமர் மோடி


குழந்தைகள் மிகவும் திறமைசாலிகள். அவர்கள், விளையாடும் போதும், பெற்றவர்களுடன் பேசும் போதும், வெளியே செல்லும் போதும் நிறைய கற்றுக் கொள்கிறார்கள். ஆனால், அவர்கள் என்ன கற்றுக் கொண்டார்கள் என கேட்காமல், எவ்வளவு மார்க் எடுத்தார்கள் என கேட்கும் நிலை மாற வேண்டும்.


மேலும் படிக்க | NEP 2020 என்பது தேசத்தின் கல்வி கொள்கை, அரசின் கல்விக் கொள்கை அல்ல: பிரதமர் மோடிதேசிய கல்வி கொள்கையில், எந்தவொரு பாடத்தையும் தேர்வு செய்ய மாணவர்களுக்கு சுதந்திரம் வழங்கப்படுகிறது. இப்போது நம் இளைஞர்கள் அறிவியல், கலை அல்லது வர்த்தகத்தின் என எந்தவொரு குறிப்பிட்ட பாடத்தை தான் படிக்க வேண்டும் என்று இல்லை. தனது விருப்பப்படி எந்த பாடத்தையும்  தேர்ந்தெடுக்கலாம் என்றார் பிரதமர் மோடி.


கல்வியில் எளிதான மற்றும் புதுமையான முறைகளை நாம் அதிகமாக கடைபிடிக்க வேண்டும். Engage, Explore, Experience, Express மற்றும் Excel  ஆகியவை குழந்தைகள் திறனை பரிசோதிக்கும் அம்சமாக இருக்க வேண்டும் என்றார் பிரதமர் மோடி.


செப்டம்பர் 7 ம் தேதி தேசிய கல்வி கொள்கை குறித்து ஆளுநர்கள் மற்றும் மாநில கல்வி அமைச்சர்களின் மாநாட்டில் மோடி ஏற்கனவே உரையாற்றியுள்ளார். இதில், கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கான முழுமையான செயல் திட்டத்தை அவர் வழங்கினார். அதை செயல்படுத்த இன்னும் நெகிழ்வான அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் என்றும் கூறினார். இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது குறித்து மோடி ஏற்கனவே பேசியுள்ளார். இருப்பினும், இதுவரை நடந்த நிகழ்வுகளில், இது மாறுபட்டது, ஏனென்றால் கொள்கையை செயல்படுத்தும் முக்கியமான பங்கு ஆசிரியர்களுக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | மாதம் ₹70,000 வரை சம்பாதிக்க Amazon வழங்கும் அற்புத வாய்ப்பு..!!!