நியூடெல்லி: மேற்கு மத்திய இரயில்வே மொத்தம் 2521 காலியிடங்களுக்கு விண்ணப்பங்களை கோரியுள்ளது. அப்ரண்டிஸ் பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி டிசம்பர் 17 ஆகும். தகுதியும் ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் wcr.indianrailways.gov.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேற்கு மத்திய ரயில்வே ஆட்சேர்ப்பு 2022: தகுதிக்கான அளவுகோல்கள்


அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து 10ஆம் வகுப்புத் தேர்வு அல்லது அதற்கு இணையான படிப்பில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். NCVT/SCVT மூலம் அறிவிக்கப்பட்ட வர்த்தகத்தில் தேசிய வர்த்தகச் சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் வயது வரம்பு 15 முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும்.


மேலும் படிக்க | மாதம் ரூ.92,000 சம்பளத்தில் ESIC-ல் வேலைவாய்ப்பு!


Railway Recruitment 2022: தேர்வு செயல்முறை
இந்த அறிவிக்கையின் கீழ் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் தகுதிப் பட்டியலின் அடிப்படையில், தேர்வு செயல்முறை மற்றும் பணி நியமனம் நடைபெறும். பத்தாம் வகுப்பு தேர்வு அல்லது அதற்கு இணையான (10+2 தேர்வு முறையின் கீழ்) மற்றும் ஐடிஐ தகுதியின் அடிப்படையில் தகுதிப் பட்டியல் தயாரிக்கப்படும்.


விண்ணப்பிப்பவர்கள், தேர்வு செய்யும் வர்த்தகம்/பிரிவு/அலகு ஆகியவற்றின் அடிப்படையில், தகுதி பட்டியல் தயாரிக்கப்படும் அதாவது. வர்த்தக வாரியாக, பிரிவு/அலகு வாரியாக & சமூக வாரியாக பட்டியல்கள் தயாரிக்கப்படும்.


மேற்கு மத்திய ரயில்வே ஆட்சேர்ப்பு 2022: விண்ணப்பக் கட்டணம்
எஸ்சி/எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் தவிர அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பக் கட்டணம் 100 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


சம்பளம்
தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், குறிப்பிட்ட காலத்திற்குப் பயிற்சியாளராக பணி புரிவார்கள்., மேலும் தற்போதுள்ள விதிகளின்படி பயிற்சியின் போது அவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.


மேலும் படிக்க | 8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் வேலை 


மேற்கு மத்திய ரயில்வே ஆட்சேர்ப்பு 2022: விண்ணப்பிப்பதற்கான வழிமுறை
படி 1: WCR இன் இணையதளத்தைப் பார்வையிடவும் - wcr.indianrailways.gov.in


படி 2: ஆட்சேர்ப்பு-ரயில்வே ஆட்சேர்ப்பு செல்-2022-23க்கான, Engagement of Act Apprentice என்பதைக் கிளிக் செய்யவும்.


படி 3: 'ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்' என்பதைக் கிளிக் செய்யவும்


படி 4: கேட்கப்படும் விவரங்களை உள்ளிடவும்.


படி 5: விண்ணப்பத்தை சமர்பித்த பிறகு, ஆன்லைன் விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுக்கவும்.


மேலும் படிக்க | SSC Recruitment: 24,369 கான்ஸ்டபிள் பணிகளுக்கான வேலைவாய்ப்பு! விண்ணப்பிக்க ரெடியா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ