பல்கலைக்கழகங்களில் இறுதி ஆண்டு தேர்வு கட்டாயம்: உச்ச நீதிமன்றம்
இறுதி ஆண்டு தேர்வுகள் முடிக்கப்பட வேண்டிய காலக்கெடுவை நீட்டிக்க பல்கலைக்கழக மானிய ஆணையத்தை (UGC) மாநிலங்கள் அணுகலாம் என்ற அனுமதியை நீதிமன்றம் மாநிலங்களுக்கு வழங்கியது.
புதுடெல்லி: COVID-19 தொற்றுநோய்க்கு மத்தியில் இறுதி ஆண்டு பல்கலைக்கழக தேர்வுகளை நடத்தாமல் எந்த மாநில அரசும், பல்கலைக்கழகங்களும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு தேர்ச்சியை அளிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் (Supreme Court) வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 28) உத்தரவிட்டதாக பி.டி.ஐ தெரிவித்துள்ளது.
எனினும், இறுதி ஆண்டு தேர்வுகள் முடிக்கப்பட வேண்டிய காலக்கெடுவை நீட்டிக்க பல்கலைக்கழக மானிய ஆணையத்தை (UGC) மாநிலங்கள் அணுகலாம் என்ற அனுமதியை நீதிமன்றம் மாநிலங்களுக்கு வழங்கியது. நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான பெஞ்ச், குறிப்பிட்ட தேதிக்குள் தெர்வுகளை நடத்த இயலாது என மாநிலங்கள் எண்ணினால், அவர்கள் தேர்வை நடத்த புதிய தேதிகளைக் கோர UGC-ஐ அணுக வேண்டும் என கூறியது.
ALSO READ: NEET & JEE தேர்வுகளை ஆன்லைனில் நடத்தலாம்: மத்திய அரசுக்கு பஞ்சாப் முதல்வர் ஆலோசனை
செப்டம்பர் இறுதிக்குள் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இறுதி கால தேர்வுகளை நடத்த கட்டாயப்படுத்திய பல்கலைக்கழக மானிய ஆணையத்தின் (UGC) சுற்றறிக்கையை எதிர்த்து போடப்பட்ட கோரிக்கைகள் சம்பந்தமான தனது உத்தரவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 18) ஒதுக்கியிருந்தது.
ஜூலை 6 வழிகாட்டுதல்கள் நிபுணர்களின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டவை என்றும், உரிய ஆலோசனையின் பின்னர் செய்யப்பட்டவை என்றும், வழிகாட்டுதலின் அடிப்படையில் இறுதித் தேர்வுகளை நடத்த முடியாது என்று கூறுவது தவறானது என்றும் UGC முன்பு கூறியிருந்தது.
ALSO READ: திட்டமிடப்படி JEE மற்றும் NEET தேர்வுகள் நடைபெறும்: தேசிய தேர்வு முகமை உறுதி