சென்னை: 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு வருகிற மே மாதம் 3 ஆம் தேதி தொடங்குகிறது. மே 21ம் தேதி வரை நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில், மாநில கல்வி வாரியத்தில் (Tamil Nadu state Board) 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான பொதுதேர்வுக்கான கால அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.


கொரோனா வைரஸ் (Coronavirus) தொற்று பரவல் காரணமாக கல்வி நிறுவனங்களும் கடந்த ஆண்டு மார்ச் முதல் மூடப்பட்டன. படிப்படியாக, கொரோனா தொற்று பரவல் குறைந்ததையடுத்து, தமிழகத்தில் கடந்த ஜனவரி 19ஆம் தேதி முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. அதுவரை ஆன்லைனில் (Online) நடைபெற்று வந்த வகுப்புகள் தற்போது வழக்கம் போல நேரடியாக நடைபெற்று வருகின்றன.


Also Read | இந்த ஆண்டு இரண்டு முறை நடக்குமா NEET தேர்வு? எதிர்பார்ப்பில் மாணவர்கள்


வழக்கத்துக்கு மாறாக கடந்த ஆண்டு நிகழ்வுகள் அனைத்தும் இருந்ததால், இந்த ஆண்டு 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எப்போது தொடங்கும் என்பதில் குழப்பம் நீடித்தது. பொதுவாக மார்ச் மாதத்தில் பொதுத் தேர்வு தொடங்கும். தற்போது, தேர்வுக்கான கால அட்டவணை எப்போது வெளியாகும் என்ற மாணவர்களின்  எதிர்பார்ப்பு முடிவுக்கு வந்தது.


12ம் வகுப்பு பொதுத் தேர்வு கால அட்டவணை:


மே 3ஆம்தேதி- மொழித்தாள்,


மே 5 ஆம்தேதி - ஆங்கிலம்


மே 7 ஆம்தேதி: கணிணி அறிவியல், உயிரி அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல் தேர்வுகள்


மே 11ஆம்தேதி - இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம்


மே 17ஆம்தேதி - கணிதம், விலங்கியல்


மே19ஆம்தேதி - உயிரியியல் வரலாறு


மே 21ஆம்தேதி - வேதியியல், கணக்குப்பதிவியல் உள்ளிட்ட தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Also Read | IND vs Eng: இங்கிலாந்தை வீழ்த்தி 317 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!!


12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.15 மணி வரை நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த சுமார் 8 லட்சம் மாணக்கர்கள் தேர்வு எழுதுவார்கள்.  


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR