NEET மற்றும் JEE போன்ற போட்டித் தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், மாநில அரசின் கல்வி சேனலான கல்வி டிவி NEET மற்றும் JEE தேர்வுக்கான பாடங்களை ஒளிப்பரப்பத் தொடங்கியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஞாயிற்றுக்கிழமை முதல், புதுக்கோட்டையில் உள்ள மவுண்ட் சியோன் மெட்ரிகுலேஷன் பள்ளியில், ஆசிரியர்கள் படப்பிடிப்புக்கான குறிப்புகள் மற்றும் விளக்கக்காட்சிகளுடன் வருகிறார்கள் என தகவல்கள் தெரிவிக்கிறது.


தலைமை கல்வி அதிகாரி (தலைமை நிர்வாக அதிகாரி) டி விஜயலட்சுமி அவர்கள் 23 ஆசிரியர்களை NEET மற்றும் JEE பாடம் தொடர்பான வீடியோ தயாரிப்புகளுக்காக தேர்வு செய்துள்ளார். இவர்கள் அனைவரும் நல்ல தகுதி வாய்ந்த அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சிலர் பாடப்புத்தகங்களை தொகுப்பதில் பங்களிப்பு செய்துள்ளனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.


போட்டித் தேர்வுகளுக்கு வகுப்புகள் எடுக்காதவர்களுக்கு, குறிப்பாக அரசு பள்ளி மாணவர்களுக்கு இதுபோன்ற பிரத்யேக ஆயத்தப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக படப்பிடிப்பு விரைவுபடுத்தப்பட்டுள்ளது என CEO., தெரிவித்துள்ளார்.


முதல் நாள் படப்பிடிப்பில், தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் மவுண்ட் சியோன் மெட்ரிகுலேஷன் பள்ளி முதல்வர் பராதிராஜா செட்களைப் பார்வையிட்டு ஏற்பாடுகளைச் சரிபார்த்தனர். சோதனைகளுக்கு பின்னரே படப்பிடிப்புக்கு வர ஆசிரியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது, மேலும் இந்த படபிடிப்பு வேலைகள் வரும் செவ்வாய்க்கிழமை வரை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த காலக்கட்டத்தில் தினம் காலை 9 மணி முதல் மாலை 5.45 மணி வரை படப்பிடிப்பு நடைபெறுகிறது. கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடம் தொடர்பான வீடியோக்கள் பதிவு செய்யப்படுகிறது. "ஆசிரியர்கள் பள்ளியில் வகுப்பு எடுப்பது போலவே வீடியோவிற்கான வகுப்பையும் எடுப்பார்கள். தேவையான இடங்களில் பவர்பாயிண்ட் விளக்கக்காட்சியும் வழங்கப்படும்” என்று ஊடக ஒருங்கிணைப்பாளர் முனியசாமி தெரிவிக்கின்றார்.