8-12 ஆம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் கல்விக்காக இலவச tablets
அரசு பள்ளிகளில் 8 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு டேப்லெட்டுகளை இலவசமாக வழங்க ஹரியானா அரசு முடிவு செய்துள்ளது.
கொரோனா வைரஸ் உலகை பாடாய் படுத்தி வருகிறது. நம் அன்றாட வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் நாம் பல வித மாற்றங்களை சந்தித்து வருகிறோம். மாணவர்கள் கல்வி கற்கும் விதமும் வெகுவாக மாறியுள்ளது.
ஆன்லைனில் கல்வி (Online Education) புகட்டல் நடந்துகொண்டிருக்கும் இவ்வேளையில் ஹரியானா அரசாங்கம் (Haryana Government) ஒரு குறிப்பிடத்தக்க செயலை செய்துள்ளது. அரசு பள்ளிகளில் 8 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு டேப்லெட்டுகளை இலவசமாக வழங்க ஹரியானா அரசு முடிவு செய்துள்ளது.
"டிஜிட்டல் கல்வியைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில், பட்டியலினத்தோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை சமூகம் உட்பட அனைத்து வகைகளையும் சேர்ந்த அரசுப் பள்ளிகளின் எட்டாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் சிறுவர் சிறுமிகளுக்கு டேப்லெட்டுகளை வழங்குவதற்கான முடிவு ஹரியானா அரசாங்கத்தின் பரிசீலனையில் உள்ளது” என ஒரு உத்தியோகபூர்வ வெளியீடு தெரிவிக்கின்றது.
டேப்லெட்டுகள் (Tablets) அரசாங்கத்தின் சொத்தாக இருக்கும் நூலகத் திட்டத்தின் படி மாணவர்களுக்கு இலவச டேப்லெட்டுகளை விநியோகிக்க ஹரியானா அரசு முடிவு செய்துள்ளதாக அறியப்படுகிறது. பன்னிரெண்டாம் வகுப்பு முடிந்ததும் மாணவர்கள் டேப்லெட்டை திருப்பித் தர வேண்டும்.
ALSO READ: Dec 3: 2021 பொதுத் தேர்வுகள், NEET, JEE பற்றிய பெரிய அறிவிப்பு: கல்வி அமைச்சகம்
இந்த டேப்லெட்களில் தேர்வுகள், பாடம் தொடர்பான வீடியோக்கள் மற்றும் பிற பாட விவரங்கள் மற்றும் டிஜிட்டல் புத்தகங்கள் போன்ற முன் ஏற்றப்பட்ட உள்ளடக்கம் இருக்கும் என்று அரசாங்கம் கூறியது. அரசு பள்ளிகளின் படிப்புகளின்படி உள்ளடக்கம் இருக்கும்.
இலவச டேப்லெட்களின் விநியோகம் மாணவர்களுக்கு வீட்டிலேயே வெவ்வேறு தலைப்புகளைக் கற்கவும், ஆன்லைன் தேர்வுகளை எழுதவும் உதவும் என்று ஹரியானா அரசு நம்புகிறது.
கொரோனா வைரஸ் (Corona Virus) தொற்றுநோய் விரைவில் முடிய வாய்ப்பில்லை என்றும், இலவச டேப்லெட்டுகளை விநியோகிக்க அரசாங்கத்தின் நடவடிக்கை பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ள உதவுவதில் மிகவும் உதவியாக இருக்கும் என்றும் கல்வித் துறை நிபுணர்கள் கருதுகின்றனர்.
ஏழை மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி கற்க அரசாங்கம் சார்பில் செய்யப்படும் இப்படிப்பட்ட வசதி பாராட்டப்பட வேண்டியதாகும். இதை ஒரு முன்னோடியாகக் கருதி மற்ற மாநிலங்களும் பின்பற்றலாம்.
ALSO READ: 2021 ஆம் ஆண்டின் 10, 12, NEET, JEE தேர்வுகளை தள்ளிப்போடுமா CBSE?
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR