5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் தேர்வுக்குழு அமைத்து தேர்வுப்பணிகளை மேற்கொள்ள உத்தரவு..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை: 5, 8 பொதுத்தேர்வு வழிமுறைகள் வெளியீடப்பட்டுள்ளது. 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு 3 கி.மீ. தூரத்துக்குள் தேர்வு மையம் அமைக்க வேண்டும். 5-ம் வகுப்புக்கு தமிழ், ஆங்கிலம், கணக்கு, ஆகிய பாடங்களுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடத்தப்படும். 8 ஆம் வகுப்புக்கு தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 5 பாடங்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.


தமிழகத்தில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. இதற்கு பலர் தனகளின் எதிர்ப்பையும், ஆதரவையும் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், தேர்வுகளுக்கு மூன்று ஆண்டுகள் விலக்குப் பெற்றிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது.


இதை தொடர்ந்து, 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளை நடத்தும் வழிமுறைகள் வெளியிடப்பட்டிருக்கிறது. அதன்படி, 5, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு மையங்கள் படிக்கும் பள்ளியிலிருந்து முறையே 1 மற்றும் 3 கிலோ மீட்டர் தொலைவிற்குள் இருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. தேர்வுகளுக்காக முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் குழு அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.