சென்னை: TNDTE தட்டச்சு முடிவுகள் 2022 அறிவிக்கப்பட்டன!  டைப்ரைட்டிங் தேர்வு முடிவை இன்று, ஜூன் 2, 2022 அன்று TNDTE ஆன்லைனில் அறிவித்தது. தேர்வு முடிவைச் சரிபார்ப்பதற்கான படிகள் மற்றும் நேரடி இணைப்பு இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் TNDTE, இந்த ஆண்டிற்கான டைப்ரைட்டிங் தேர்வுகளுக்கான முடிவுகளை இன்று (ஜூன் 2, 2022) வெளியிட்டது. 


விண்ணப்பதாரர்கள் தங்களின் TNDTE டைப்ரைட்டிங் ரிசல்ட் PDFஐ அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து தெரிந்துக் கொள்ளலாம்.  


GTE இன் தட்டச்சு தேர்வு முடிவுகள் PDF வடிவத்தில் இருக்கின்றன. தேர்வில் தேர்ச்சி பெற்றது தொடர்பான விவரங்களை நேரடியாக tndte.gov.in இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.


மேலும் படிக்க | முதுகலை நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின, இந்த வழியில் செக் செய்யலாம்


TNDTE தட்டச்சு முடிவுகள் 2022 - எப்படி சரிபார்க்க வேண்டும்
விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான tndte.gov.in ஐப் பார்வையிட வேண்டும்.


முகப்புப் பக்கத்தில், 'டைப்ரைட்டிங் தேர்வு முடிவுகள் 2022' (Typewriting Exam Result 2022) என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும். (நேரடி இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது)
அங்கிருந்து புதிய பக்கத்திற்கு திருப்பி விடப்படுவீர்கள்.
தேர்வுக்கான மாணவரின் பதிவு எண் மற்றும் உங்கள் உள்நுழைவுச் சான்றுகளை உள்ளிடவும்.
TNDTE தட்டச்சு தேர்வு முடிவுகள் 2022 உங்கள் திரையில் தோன்றும்.
எதிர்கால குறிப்புகளுக்கு ஒரு நகலை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுகவும்.
TNDTE தட்டச்சு முடிவு 2022 PDF - பதிவிறக்க இணைப்பு
TNDTE தட்டச்சு முடிவு 2022 - மாற்று இணைப்பு


மேலும் படிக்க | என்.பி.சி.சியின் புதிய வேலைவாய்ப்புகள்


உள்ளூர் ஊடக அறிக்கைகளின்படி தட்டச்சு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால், காலையிலிருந்து இணையதளம் செயலிழந்ததால், அது ஏற்றப்படுவதற்கு சிறிது நேரம் ஆகும். 


தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் (TNDTE)  தட்டச்சுத் தேர்வை நடத்தியது.


தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தின் மூலம் டைப்ரைட்டிங் மற்றும் சுருக்கெழுத்து தேர்வுகள் நடக்கிறது. இளநிலை, முதுநிலை என்ற இரு நிலைகளில் இந்தத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.


இந்த ஆண்டு தேர்வில் சில மாறுதல்கள் இருந்தன. வழக்கமாக, முதல் தாள், வேகத்தின் அடிப்படையிலும் (typing Speed), இரண்டாவது தாள் கடிதம் மற்றும் அறிக்கைகளை தட்டச்சு செய்வதன் அடிப்படையில் இருக்கும்.


மேலும் படிக்க | TNSDC கழகத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு அதிக சம்பளத்தில் வேலைவாய்ப்பு! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR