NEET PG 2022: முதுகலை நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின, இந்த வழியில் செக் செய்யலாம்

NEET PG Result 2022: தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு முதுகலை பட்டப்படிப்பு (NEET-PG 2022) முடிவுகளை தேசிய தேர்வு வாரியம் (NBE) அறிவித்துள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 2, 2022, 11:34 AM IST
  • முதுகலை நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின.
  • என்.பி.இ-இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான nbe.edu.in -க்கு சென்று மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளைப் பார்க்கலாம்.
  • மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.
NEET PG 2022: முதுகலை நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின, இந்த வழியில் செக் செய்யலாம் title=

புதுடெல்லி: தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு முதுகலை பட்டப்படிப்பு (NEET-PG 2022) முடிவுகளை தேசிய தேர்வு வாரியம் (NBE) அறிவித்துள்ளது.

என்.பி.இ-இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான nbe.edu.in -க்கு சென்று மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளைப் பார்க்கலாம். 

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தேர்வு முடிவுகளை வெளியிட்டு, தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இதனுடன், 10 நாட்களில் நீட் பிஜி முடிவை வெளியிட்டதற்காக மருத்துவ அறிவியல் தேசிய தேர்வு வாரியத்தை (என்பிஇஎம்எஸ்) அவர் பாராட்டியுள்ளார்.

2022 முதுகலை நீட் தேர்வு முடிவுகளுடன் கட் ஆஃப் மதிப்பெண்ணையும் வாரியம் வெளியிட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள கட் ஆஃப் மதிப்பெண்ணுக்கு மேல் மதிப்பெண் பெற்ற்றுள்ள மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்படுவார்கள். இது தொடர்பாக வாரியத்தால் தனித்தனியாக தகுதிப் பட்டியல் வெளியிடப்படும். ஜூன் 8, 2022 அன்று அல்லது அதற்குப் பிறகு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று மாணவர்கள் தங்கள் மதிப்பெண் அட்டையைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 

மேலும் படிக்க | UPSC Topper: கோவை பெண் தமிழகத்தில் முதலிடம், ஏஐஆர் 42 பெற்று சாதனை 

வாரியம், 2022 ஆம் ஆண்டுக்கான நீட் முதுகலை தேர்வை மே 21 அன்று நடத்தியது. 849 மையங்களில் தேர்வுகள் நடைபெற்றன. மொத்தம் 1,82,318 மாணவர்கள் இத்தேர்வை எழுதினர்.

முதுகலை நீட் தெர்வு முடிவுகளை இந்த வழியில் தெரிந்துகொள்ளலாம்

1. மாணவர்கள் முதலில் NBE இன் அதிகாரப்பூர்வ இணையதளமான nbe.edu.in க்குச் செல்ல வேண்டும். 
2. அதன் பிறகு முகப்பு பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள "NEET PG 2022 Result" என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
3. இப்போது உங்கள் பதிவு எண்ணை உள்ளிட்டு சப்மிட் என்ற பொத்தானைக் கிளிக் செய்யவும்.
4. உங்கள் தேர்வு முடிவு உங்கள் திரையில் தோன்றும்.
5. உங்கள் தேர்வு முடிவை பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். எதிர்கால செயல்பாடுகளுக்கு இது உங்களுக்கு உதவும். 

இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இப்போது கவுன்சிலிங் செயல்முறைக்கு பதிவு செய்ய வேண்டும். NEET PG 2022 க்கான கவுன்சிலிங் அட்டவணை விரைவில் மருத்துவ ஆலோசனைக் குழுவால் வெளியிடப்படும். கொரோனா தொற்றுநோய் காரணமாக NEET PG 2021 க்கான கவுன்சிலிங் செயல்முறை ஒரு மாதத்திற்கு முன்புதான் முடிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | TNSDC கழகத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு அதிக சம்பளத்தில் வேலைவாய்ப்பு! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News