ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்த ஊர்வசி ஊர்வசி திரைப்படப் பாடலுக்கு பிரபுதேவாவின் டான்ஸ் மிகவும்  பிரபலமானது. பாடல் வரிகள் டேக் இட் ஈஸி என்று நம்பிக்கையை கொடுத்தால், அதற்கு பிரபுதேவாவின் கலக்கல் நடனம் தமிழ் திரையுலகின் போக்கையே மாற்றியது என்றே சொல்லலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1994இல் வெளியான காதலன் திரைப்படத்தின் பாடல்களும், அதில் நக்மா மற்றும் பிரபுதேவாவின் காதலும், ரொமான்சும் பிரபலமானவை.


அதில் குறிப்பிடத்தக்க வகையில் ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈஸி பாலிஸி பாடலுக்கு பிரபுதேவாவின் நடனம் இன்றும் என்றும் என்றென்றும் யாராலும் மறக்க முடியாதவை. அதை நிரூபிக்கும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகிறது.


 



பிரபுதேவா, நகைச்சுவை நடிகர் வடிவேலு, பாடும் நிலா எஸ்.பி. பாலசுப்ரமணியன், நடிகை நக்மா என பலரின் திரை வாழ்க்கையில் திருப்புமுனையாக இருந்த திரைப்படம் காதலன்.


ஊர்வசி பாடலில் வடிவேலுவும் காமெடியாகவே புரபுதேவாவுடன் நடனமாடி கலக்கியிருப்பார். அனைவரின் மனம் கவர்ந்த பாடல் மட்டுமல்ல, நடனப்புயலாக பிரபுதேவாவை உயர்த்திய பாடல் ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈஸி பாலிஸி...


இந்த சிறப்பான பாடலுக்கு ஸ்பைஸ்ஜெட் ஏர்லைன்ஸில் பணிபுரியும் ஏர் ஹோஸ்டஸ் நடனமாடியிருக்கிறார், ஏஆர் ரஹ்மான் இசையமைத்த 'டேக் இட் ஈஸி ஊர்வசி' பாடலுக்கு நடனமாடிய வீடியோவை இணையவாசிகள் கொண்டாடுகிறார்கள். 


Also Read | ஆக்சன் நாயகனாக அவதாரமெடுக்கும் பிரபுதேவா


காலியாக இருக்கும் விமானத்தில் உமா மீனாட்சி என்ற ஸ்பைஸ்ஜெட் விமான பணிப்பெண் சிவப்பு மற்றும் கருப்பு நிற சீருடையுடன் நடனமாடுகிறார்.


இன்ஸ்டாகிராமில் தற்போது வைரலாகி வரும் வீடியோவில், உமா மீனாட்சி விமானத்தில் யாரும் இல்லாதபோது, 'டேக் இட் ஈஸி ஊர்வசி' தன்னிச்சையாக  நடனமாடுகிறார். இந்த வீடியோ பயனர்களால் பெருமளவில் பகிரப்பட்டு பார்க்கப்படும் இந்த வீடியோ "டேக் இட் ஈஸி" என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது.


விமானப் பணிப்பெண், உமா மீனாட்சிக்கு இன்ஸ்டாகிராமில் 68,000 க்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் உள்ளனர். இந்த வீடியோ ஏற்கனவே 5000 க்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்றுள்ளது


எளிமையாக பாடி ஆடும் இந்த வீடியோவை உமா மீனாட்சியின் சக ஊழியர் ஒருவர் பதிவு செய்துள்ளார்.  


Also Read | Palindrome வார்த்தைகளுடன் முதல் பாடல்; பிரபுதேவாவின் வினோதன் திரைப்படத்தில் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR